சகலத்தையுமுடையவர்களாக இருத்தல் Jeffersonville, Indiana, USA 62-0506 1இங்குள்ளதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனக்கு அந்த சிறு விபத்து நேர்ந்ததென்று நீங்கள் கேள்விப்பட்டபோது, நீங்கள் ஏறெடுத்த ஜெபங்களைப் பாராட்டுகிறேன். தேவன் ஆயத்தமாகும் வரைக்கும் சாத்தான் உங்களை எடுக்க முடியாதென்பதை அது காண்பிக்கிறது. அது எப்படி... என்ன நடந்ததென்று உங்களில் அநேகர் வியக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குப் பிரியமான ... நீங்கள் அறிந்துள்ளபடி நான் .... என் பொழுதுபோக்கு, அல்லது நான் இளைப்பாறுவதற்காக மீன் பிடிக்கவோ, குறி வைத்து சுடும் இடத்தில் சென்று சுடுவதோ, வேட்டைக்குச் செல்வதோ, இப்படி ஏதாவதொன்றைச் செய்வது வழக்கம். அதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் 'கால்ஃப் (golf) விளையாடியிருந்தால் அரை நிர்வாணப் பெண்களுடன் அங்கு இருந்திருப்பேன். நான் மட்டைப் பந்து விளையாட்டுக்காரனாய் இருந்திருந்தால், அது எப்படியிருந்திருக்குமென்று நீங்கள் அறிவீர்கள். அது வெளிப்புறத்தில் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்றவைகளாய் இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். 2எனக்கு எப்பொழுதுமே வெதர்பி மாக்னம் துப்பாக்கி என்றால் பிரியம். அதைக் குறித்து ஏதாவதொன்றை நான் கூற நேர்ந்திருந்தால், யாராகிலும் ஒருவர் அதை எனக்கு வாங்கித் தந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அதை நான் எனக்குள் வைத்துக்கொண்டேன். ஏனெனில் அதை வாங்க வேண்டும்மென்றால் அவர்கள் அதிக விலை கேட்கிறார்கள். மிஷனரிமார்கள் காலணிகளும் கூட இல்லாதிருக்கிறார்கள் என்று நான் அறிந்திருக்கும் யாராகிலும் ஒருவர் அவ்வளவு பணத்தைக் கொடுத்து அந்த துப்பாக்கியை வாங்கித் தரச் செய்யலாமா? அண்மையில் சகோ. ஆர்ட் வில்சன் பில்லிக்கு எழுபதாம் மாடல்வின் செஸ்டர் துப்பாக்கி ஒன்றைச் கொடுத்தார் - இரண்டு - ஐம்பத்தேழு ராபர்ட்ஸ் மாடல். இந்த துப்பாக்கியில் சிறிது மாறுதலை உண்டாக்கி, ஆபத்து ஒன்றும் ஏற்படாத அளவுக்கு அதை வெதர்பி மாக்னம் துப்பாக்கியாக மாற்றி விடலாம் என்று திரு. வெதர்பி பத்திரிக்கையில் விளம்பரம் செய்திருந்தார். எனவே நமது சபைக்கு வரும் சகோ. ராட்னி ஆம்ஸ்டராங் அதை அனுப்பி வெதர்பி மாக்னம் துப்பாக்கியாக மாற்றினார். அது சரியாக மாற்றப்படவில்லை. எனவே அதைக் கொண்டு நான் சுட்டபோது... வின்செஸ்டர் நிர்வாகம், அவர்களுடைய துப்பாக்கி ஆறாயிரத்து தொளாயிரம் பவுண்டு அழுத்தத்தை தாங்கும் என்று கூறுகிறது. அது எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியும். 3நான் துப்பாக்கியை உயர்த்தினேன். சகோ. உட் என்னுடன் வந்திருந்தார். அது என் கண்ணிலிருந்து ஒரு அங்குலம் தூரத்தில் மாத்திரமே இருந்தது, இப்படி ஆறாயிரத்து தொளாயிரம் பவுண்டு அழுத்தத்துடன் ஐம்பது கெஜ தூரத்துக்கு சுட்ட போது, துப்பாக்கி குழாய் சிதறி ஐம்பது கெஜ கோட்டை நோக்கி சென்றது. அதன் 'போல்டு' (bolt ) இந்த பக்கம் சென்றது. என் கையிலிருந்த துப்பாக்கி சுக்குநூறாகி விட்டது. இந்த மச்சு உள்ள உயரம் வரைக்கும் தீச்சுடர் சென்றது. ஓரிரண்டு வினாடி வரைக்கும் அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான் பார்த்த போது இரத்தம் இப்படி பீறிட்டு வந்தது. நான் கொல்லப்பட்டேன் என்று எண்ணினேன். எனவே என் கையை நான் அப்படி சிறிது நேரம் பிடித்துக் கொண்டேன். சகோ. உட்... நான் பார்க்க முயன்றேன், ஆனால் இந்த கண்ணால் என்னால் காண முடியவில்லை. எனக்கு செவி கேட்கவேயில்லை. நான் காற்றில் நடப்பது போன்ற ஒரு உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. குண்டு எங்குபட்டது என்று காண சகோ. உட் இலக்கை நோக்கி செல்வதைக் கண்டேன். அவருடைய கவனத்தைக் கவர நான் முயன்றேன். அவர் திரும்பி வந்தார். நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு வந்தோம். துப்பாக்கி குண்டின் துணுக்கு என் கண்ணைச் சுற்றிலுமுள்ள இடத்தில் பதிந்து விட்டது. அடிபட்ட இடத்தில் என் முகம் 'ஹாம்பர்கரை' அங்கு புதைத்தது போல் அவ்வளவு வீங்கி விட்டது. துப்பாக்கி குண்டின் ஒரு பெரிய துணுக்கு என் கண்ணின் மேல், 'சைனஸ்' (sinus) எலும்புக்கும் மண்டை ஓட்டு எலும்புக்கும் இடையேயுள்ள குழியில் வட்டமாக பதிந்தது. டாக்டர் அடேயர் அதை வெளியே எடுத்தார். 44. சில நாட்கள் கழித்து, அதாவது அடுத்த நாள், டாக்டர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர்கள் என் கண்ணைப் பரிசோதிக்க நிபுணர் ஒருவரிடம் அனுப்பினார்கள். அவர் முப்பது துப்பாக்கி குண்டு துணுக்குகள் கண்ணுக்கு கீழ் வட்டமாக பதிந்து, கருவிழிக்குள்ளும் சென்றுள்ளதை கண்டுபிடித்தார். அதை வெளியே எடுக்க முடியவில்லை. அது கண்ணுக்குள் செல்லாமல், இப்படி வட்டமாக பதிந்திருந்தது. டாக்டர் அடேயர் நிபுணருக்கு எழுதிய கடிதத்தில். “எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று, நல்ல தேவன் தமது ஊழியக்காரனை பாதுகாக்க அவருடன் கூட பெஞ்சில் (bench) அமர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவருடைய தலை அங்கிருந்திருக்காது' என்று எழுதினார். சகோ. உட், இங்கிருந்து கீழ்பாகம் வரைக்குமே கண்டிருப்பார், பாருங்கள். பின்னால் அடித்த அந்த அழுத்தம்! அது எப்படி நேர்ந்ததென்று தெரியவில்லை. அந்த எழுபதாம் மாடல் துப்பாக்கியிலிருந்து சிதறிய அந்த கனமுள்ள 'போல்டு' கான்செர்வேஷன் க்ளப் உள்ள தூரம் வரைக்கும், இன்னும் மான்களின் இருப்பிடம் வரைக்கும் சிதறி சென்றது. துப்பாக்கியின் ஒரு பாகத்தை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை . 5எனவே அது ஒன்றை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கர்த்தருக்கு சித்தமானால் ஒரு நாள் அதன் பேரில் ஒரு பிரசங்கத்தை நிகழ்த்துவேன். “மனம் மாறுதல் நல்லது தான். ஆனால் அதை கீழ்மட்டத்திலேயே வைத்திருங்கள். அது எடுக்க வேண்டிய பளுவுக்கு அது முன் குறிக்கப்படாமலிருந்தால், ஒவ்வொரு முறையும் அது வெடித்து சிதறும்.'' அது உண்மை . எனவே நீங்கள் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அது துவக்கத்தில் இருந்தது போலவே இருப்பது நலம். அதை மற்றது போல் மாற்ற... (சபையிலுள்ள ஒரு சகோதரி பேசுகிறாள் - ஆசி). இப்பொழுது பார். அது ... ஓ, ஆமாம். அப்படி கருதப்படும் என்று நாம் நினைக்க வழியுண்டு. ஆனால் எனக்குத் தெரிந்த வரையில், அப்படியொன்றுமில்லை .... ஒலிபெருக்கியின் சத்தம் பிரதிபலிக்கும்போது, என் செவிகளில் ஒரு விதமான ரீங்காரம் உண்டாகின்றது என்பது உண்மையே. அதனால் தான் இன்று காலை நான் அங்கு வரவில்லை. நீங்கள் பேசும் போது, அது உரத்த சத்தமாக என் செவிகளில் தொனிக்கிறது. அவர்கள் என்னை காது நிபுணரிடம் கூட்டிச் சென்றனர். அவர்,''செவிப்பறை (ear drum) சிறிதும் கூட வீங்க வில்லை. கண்ணைப் பொறுத்த வரையில், ''உமக்கு முன்பிருந்த பார்வையே இருக்கும். அது கண்ணுக்கு கீழே கருவிழியைச் சுற்றிலும் வட்டமாக பதிந்துள்ளது. அந்த துப்பாக்கி குண்டு துணுக்கு எப்பொழுதும் அங்கிருக்கும்'' என்றார். “எனக்கு இரண்டு வயது முதற்கு அது உள்ளது. அது வேறொன்றினால் ஏற்பட்டது'' என்றேன். பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோ. ராபர்ஸன்; அவரை நான் அழைத்து அவரிடம் இதை கூறினேன். அவர் ''கவலை கொள்ள வேண்டாம். எனக்குள் இரண்டு அல்லது மூன்று பவுண்டு துணுக்குள் உள்ளன'' என்றார். அவர் ஒரு இராணுவ வீரர். 'அது உங்களை பாதிக்காது. எனக்குள் அது நிறைய உள்ளது' என்றார் அவர். 6அண்மையில் எனக்கு கிடைக்கபெற்ற தேவனுடைய தரிசனம் என் நினைவுக்கு வருகிறது. அதை இங்கு நான் கூறினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அன்று காலை கர்த்தருடைய இனிமை என்னிடம்,“ எதற்கும் பயப்படாதே. நீ எங்கு சென்றாலும் என்ன செய்தாலும், இயேசு கிறிஸ்துவின் என்றென்றும் தவறாத பிரசன்னம் உன்னோடு கூட இருக்கும், என்றார். எனவே அவனால் முடியாது. தேவன் ”அது முடிந்து விட்டது'' என்று கூறும் வரைக்கும் சாத்தானால் என்னைக் கொல்லமுடியாது. பாருங்கள்? அவன் முயற்சி செய்யலாம். ஆனால் அவன் முயற்சியில் வெற்றி காண முடியாது. எனவே விசித்தரமான காரியம் என்னவெனில், நான் எப்படியோ என் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்தேன். என் இடது கண்ணால் மாத்திரம் என்னால் காணமுடிந்தது. நான் எப்படியோ கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்தேன். சிவப்பு இந்தியர்களின் இடத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த சகோதரன் கூட்டத்தை ரத்து செய்து விட்டதாக; அல்லது நான் மறுபடியும் மேற்கு கரைக்கு செல்லும் வரைக்கும் அதை தள்ளிப்போட்டு விட்டாராம். எனவே அந்த கூட்டத்தை நடத்த அங்கு செல்லபோகின்றோம். இந்த முறை சகோ. ஆர்கன் பிரைட் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார். அந்த கூட்டம் முடிந்தவுடன் நான் அலாஸ்காவிலுள்ள ஆங்கரேஜுக்கு செல்லப்போகிறேன். நான் அதிகமாக சார்ந்திருக்கும் காரணம் என்னவெனில் 7உங்களில் அநேகர் நான் கண்ட தரிசனத்தை நினைவில் கொண்டிருப்பீர்கள் - நான் ஒன்பது அடி நீள சாம்பல் நிறக் கரடியையும் (அதை நான் கூறினது சபைக்கு ஞாபகமிருக்கும்), கலைமானையும் சுட்டு வீழ்த்தியது. நான் வேறொன்றையும் தரிசனத்தில் சுட்டு வீழ்த்தினேன். அது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் ஒரு பெரிய பழுப்பு நிறக்கரடியை தரிசனத்தில் கண்டேன். அது 'கோடியாக்' ஆக இருக்கலாம். அது கனடாவில் நிறைவேற முடியாது. ஏனெனில் அவை அங்கில்லை, பாருங்கள், அவை எங்கிருந்தாலும், அது நிறைவேறும். அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது நிறை வேறும். பாருங்கள்? எனக்காக நீங்கள் ஜெபித்தற்காக உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். எனக்கு அடிபட்டது என்று நீங்கள் கேள்விப்பட்ட போது, உங்களில் அநேகர் எனக்காக ஜெபித்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஒரு சிறு குழு.... பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மகள் ரெபேக்காள், சபைக்கு வரும் சகோதரி டெளவுக்கு கடிதம் மூலம் அதை அறிவித்தாள். இரண்டு நாட்கள் கழித்து அந்த சகோதரி மேடாவை தொலைபேசியில் கூப்பிட்டு, ''அதனால் பயன் இருந்ததோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்குள்ள குழுக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஜெபித்தோம்'' என்றார்கள். மெதோடிஸ்டு போதகரும், சகோ. ப்ரெளனும் அவருடைய உறவினரும் மற்றவரும் ஒன்று சேர்ந்து இரவு முழுவதும் எனக்காக ஜெபித்தனர். அவர்,“தேவன் எங்கள் ஜெபத்தைக் கேட்டாரோ இல்லையோ வென்று எனக்குத் தெரியாது. சகோ. பிரன்ஹாம் அநேகருக்கு ஜெபம் செய்திருக்கிறார், எனவே நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம் என்று எண்ணினோம்”என்றார். அப்படிப்பட்ட ஜெபத்தை அவர் கேட்கிறார். ஆம், ஐயா அப்படிப்பட்ட ஜெபத்தை! 8இங்குள்ள சகோதரரில் ஒருவரான சகோ.க்ரேஸ் என்பவரை அண்மையில் சாத்தான் பின் தொடர்ந்தான். அவர் வாய்க்கால் பாலம் ஒன்றின் மேல் மோதி உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் எப்படி உயிர் தப்பினார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் மருத்துவமனையில் படுத்திருந்தபோது, நியூ ஆல் பனியைச் சேர்ந்த மெட்காஃப் என்னும் பெயருள்ள சகோதரன் அங்கு வந்தாராம். அவர், ''சகோ. க்ரேஸ், உமக்கு ஜெபிக்க நான் தகுதியற்றவன். ஆயினும் கர்த்தர் என் இருதயத்தை ஏவினதால் என்னால் ஜெபம் செய்யாமலிருக்க முடியவில்லை'' என்று கூறி முழங்கால்படியிட்டு ஒரு சிறு ஜெபம் செய்து போய் விட்டாராம். தேவன் சகோ. க்ரேஸுக்கு அந்த இடத்திலேயே சுகமளித்தார்.பாருங்கள்? அது கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள சுகமாக்கும் வரம் - ஒரு அங்கத்தினர் மற்றொருவருக்காக ஜெபம் செய்தல். நீங்கள் சாதாரண சபை அங்கத்தினர் மாத்திரமே என்று எண்ண வேண்டாம். நீங்கள் மற்றொருவரைப் போல் முக்கியமான அங்கத்தினர். இந்த கரம் என் கரமாகவும் இந்த காது என் காதாக இருப்பது போல அது உள்ளது. பாருங்கள்? அது சரீரத்தின் ஒரு உறுப்பு. நாமெல்லாரும் .... ஒரு அவயம் பாடுபட்டால் எல்லா அவயங்களும் கூடப் பாடுபடும். ஒற்றுமை, ஆசீர்வாதமான ஒற்றுமை! இப்பொழுது நான்.... 9அதன் பிறகு, இப்பொழுது, சில கூட்டங்களை நடத்தினேன். அப்பொழுது சிறிது நேரத்தை - ஒரு இரவை - இந்த கூடாரத்துக்கென்று ஒதுக்கினேன். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலையில், ''தீர்க்கதரிசியின் அடிச்சுவடு“ என்னும் பொருளின் பேரில் இக்கூடாரத்தில் பேச விரும்புகிறேன். நாளை இரவு, இல்லை ஞாயிறு இரவு, நமது சகோதரரில் ஒருவரான சகோ. ரட்டல் அவர்களின் சுவிசேஷ கூடாரத்தில் இருப்பேன். அப்பொழுது கர்த்தருக்கு சித்தமானால், ''ஊக்கம் செலுத்துதல்“ என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். அதன் பின்பு, அதற்கடுத்த செவ்வாய் அன்று, முழு சுவிசேஷ வர்த்தகரின் மாகாண கன்வென்ஷன் கூட்டங்களுக்காக நாங்கள் விஸ்கான்ஸினுக்கு செல்ல வேண்டும். அங்கு மூன்று இரவுகள் இருப்பேன். அது அந்த ... பில்லி... அந்த நகரத்தின் பெயரென்ன? க்ரீன் லேக், விஸ்கான்ஸின். எப்பொழுது? வியாழன், வெள்ளி, சனி: பதினேழாம், பதினெட்டாம் , பத்தொன்பதாம் தேதிகளில் விஸ்கான்ஸினிலுள்ள க்ரீன் லேக் என்னுமிடத்தில் மாகாண கன்வென்ஷன். 10பன்னிரண்டாம் தேதி ஞாயிறன்று நான் சிக்காகோவில் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் இருப்பேன்- நாம் கடந்தமுறை இருந்த அதே அரங்கத்தில். அதன் பெயர் ஞாபகமுள்ளதா? ஸ்டீபன் மாத்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கம் - ஞாயிறு பிற்பகல். பிறகு திங்களன்று நான் .... அந்த இடத்தின் பெயர் மறந்து விட்டது. அந்த இடத்தில் சிக்காகோவிலுள்ள போதகர் சங்கத்தின் கன்வென்ஷன் நடைபெறும் வரையும், சில விஷயங்களை குறித்து தர்க்கிக்க அவர்கள் என்னை சந்திப்பதையும் அவர் எனக்குக் காண்பித்தார்'', “கர்த்தர் எனக்கு அந்த இடத்தில் நடப்பதை காண்பித்தார்'' என்றேன். அது சகோ. ஜோசப் போஸ்க்கு விடை பெறும் கூட்டமாக இருக்கும். என்னை காண அவர் நாளை விமானத்தில் இங்கு வருகிறார், திங்களன்று அவருக்கு விடைபெறும் விருந்து. பின்பு நாங்கள் வீடு திரும்புகிறோம். அதன் பிறகு தெற்கு கரோலினாவிலுள்ள , இல்லை வடக்கு கரோலினா விலுள்ள, சதர்ன் பைன்ஸ் என்னுமிடத்துக்கு செல்ல நேரமாயிருக்கும். அதன் பிறகு தெற்கு கரோலினாவிலுள்ள கொலம்பஸ்க்கு; பிறகு மேற்கு கரையிலுள்ள கெளபாலஸ் க்கு, அங்கிருந்து கிராஸ் பட்டினத்துக்கு, பிறகு ஸ்போகேனுக்கு, அங்கிருந்து கனடாவுக்கு, பிறகு அலாஸ்காவுக்கு. எனவே எங்களுக்காக ஜெபியுங்கள். எங்களுக்கு உண்மையில் உங்கள் ஜெபம் தேவை. 11தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நாம் வேதத்தில் போதிக்கப்பட்டுள்ளோம். இது நடந்த பிறகு, ஜனங்களுக்கு என் மேலுள்ள பற்றைக்காணும்போது, நான் நம்புகிறேன்... யாரோ ஒருவர், ''அது ஏன் நடக்க வேண்டும்? அது நடக்க தேவன் ஏன் அனுமதித்தார்?'' என்று கேட்டார். அங்கு சென்று கொண்டிருக்கும் வழியில் நான் கொல்லப்பட்டிருக்கலாம். அப்படி ஏதோ ஒன்று நடந்திருக்கலாம், அவர் அதைக் கடக்கப் பண்ணினார். ''தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது'' என்பது போன்ற வேதவாக்கியங்கள் ஒருபோதும் தவறாயிருக்க முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். என் இருதயத்தை நான் அறிந்திருப்பேனானால், அவரை நான் நேசிக்கிறேன். அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அது எங்களை சிறிது அருகாமையில் கொண்டு வருகிறது. 12அதை இப்பொழுது யோசித்து பார்க்கும்போது, அதைக் குறித்து கேள்விப்பட்ட எவருக்குமே, அந்த வெடிப்பில் இருந்து விட்டு எப்படி எனக்குத் தலையும் தோள்களும் உள்ளன என்பது விளங்காத ஒன்றாக இருக்கும். இது எனக்கு மிகவும் அருகாமையில் இருந்தபடியால், அந்த வெடிப்பு என் முகத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் பவுண்டு அழுத்தத்தை உண்டாக்கியிருக்கும். பாருங்கள், உங்களை தூள் தூளாக்க அது போதுமானது, பாருங்கள். அது கனமான எஃகு துப்பாக்கியை வெடிக்கச்செய்து, துப்பாக்கி குழாயை ஐம்பது கெஜக் கோட்டை நோக்கி எறிந்திருக்குமானால்; அந்த துப்பாக்கியை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அது துப்பாக்கியைப் போலவே காணப்படவில்லை. அது பொறுக்கியெடுக்கப்பட்ட வெறும் துண்டுகள் மாத்திரமே. அப்படிப்பட்ட விபத்திலிருந்து எந்த ஒரு சேதமும் நேரிடாமல் தப்பினது. ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்! எட்டியிடமிருந்து அங்கு நான் இப்பொழுது வரவேண்டிய அவசியமில்லை என்னும் செய்தி வரும் வரைக்கும் அங்கு போகாமல் என்னை தடுக்க அது போதுமானதாயிருந்தது. ''திகைப்பூட்டும் கிருபை, அந்த தொனி எவ்வளவு இனிமையானது, என்னைப் போன்ற ஒரு ஈனனை அது இரட்சித்தது. தேவன் நம்மோடு கூட இருக்கிறார் என்பதை அது நமக்குத் தெரிவிக்கிறது. தேவன் நம்மோடு கூட இருக்கிறார், அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! 13இங்கு வரவேண்டுமென்று நினைக்கிறேன் என்று இன்று காலை கூறினேன். அப்பொழுது இங்குள்ள விலையேறப் பெற்ற சகோதரன் நான் திரும்பிச் செல்லும்போது .... இன்று நான் சகோதரி உட்டிடம் கூறினேன், நான் நினைக்கிறேன். சகோ. நெவில் ... பில்லி என்னை அழைத்து, ''உங்களால் முடியுமானால் வந்து செய்தியைக் கேளுங்கள்'' என்றான். ஒரு சிறு உலோகத்துண்டு உள்ளே சென்று என் கண்ணின் கீழே பதிந்துவிட்டது. அது என்னை மிகவும் தொந்தரவு செய்தது, ஆனால் இப்பொழுது அது எடுக்கப்பட்டு விட்டது. அவர்கள் கழுவி அதை வெளியே எடுத்து விட்டனர். அவன் கூறினான்... இன்றிரவு இங்கு வரவேண்டுமென்று எண்ணினேன். அந்த விலையேறப் பெற்ற சகோதரன் இவ்விதம் பிரசங்கித்துக் கொண்டிருக் கிறார். ஒரு பெரிய ஆராதனையில் பிரசங்கித்தால் என்ன நேரிடுமென்று எனக்குத் தெரியும். அப்பொழுது தொண்டை கரகரப்பாகி விடுகிறது. அது எரிந்து வேதனை தருகிறது. எனவே நான் இங்கு வரவேண்டுமென்று எண்ணினேன். படிப்பதற்காக ஓரிரண்டு வேதவாக்கியங்களை தேர்ந்தெடுத்தேன். இது இராப்போஜன இரவு என்பது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு எப்பொழுதும் இராப்போஜனத்தில் பங்குகொள்ள விருப்பம். ஒரு சில நண்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் இங்கு எங்கோ இருக்கின்றனர். என்னால் சரியாக காண முடியவில்லை, அது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த கண்ணில் மருந்துபோட்டு கருவிழியை பெரிதாக்கியுள் ளதால், பார்வை ஒருவித மங்கலாய் உள்ளது. அவர்கள் இங்குள்ளனர். அவர்கள் மகிமையில் பிரவேசித்துள்ள என் விலையேறப்பெற்ற சகோதரன் எஃப்.எஃப், பாஸ்வர்த்தின் நண்பர்களும் உறவினர்களுமாவர். கர்த்தர் இவர்களை ஆசீர்வதிப்பாராக. பின் அறையில் இவர்களுக்காக நாங்கள் ஜெபித்தோம். 14மறந்து விடாதீர்கள். புதன் இரவு நமது நடுவார ஜெபக் கூட்டம் நடைபெறும். சகோ. ஜாக்ஸன் அதை வியாழன் இரவு நடத்துகிறார் என்று நனைக்கிறேன். இங்குள்ள சகோ. ஜூகியரின் கூடாரத்தில்...சகோ. ரட்டல் புதன் இரவு நடத்துகிறார். ஊடிகாவிலுள்ள கூடாரத்தில் புதன், வியாழன் இரவு, ஞாயிறு காலை இங்கு சபை ஆராதனை. இப்பொழுது ஞாயிறு இரவு நான் சகோ. ரட்டலிடம் செல்ல வேண்டும். நான் அடுத்த வாரம் புதன் இரவு அங்கு செல்லலாமென்று எண்ணினேன். ஆனால் என்னால் முடியாது.எனவே நான் ஞாயிறு இரவு அதை வைத்திருக்கிறேன். கூடாரத்திலுள்ள ஜனங்களே, இங்கே தங்கியிருங்கள், பாருங்கள். ஏனெனில் பேசுவதற்காக நான் இரவில் சகோ. ரட்டலின் கூடாரத்துக்கு செல்கிறேன், சுகமளிக்கும் ஆராதனைக்கல்ல. உங்கள் கடமையில் இந்த கூடாரத்திலேயே தங்கியிருங்கள். இது உங்கள் இடம், பாருங்கள். எனவே நாங்கள் ஒரு நல்ல தருணத்தை எதிர்ப்பார்க்கிறோம். நாங்கள் செல்லும்போது, நீங்கள் அனைவரும் எங்களுக்காக ஜெபியுங்கள். 15இராப்போஜனத்துக்கு முன்பு தேவன் இப்பொழுது இந்த இரவில் நம்மை சந்திப்பாரென்று நம்புகிறேன். இப்பொழுது நான் நினைக்கிறேன்... நமக்குத் தெரிந்த அறிவிப்புகள் இவ்வளவு தானா? பாதையை போடும் போது.... என்ன சகோதரனே? (சகோ. நெவில் சகோ. பிரன்ஹாமுடன் பேசுகின்றார் - ஆசி). அடக்க ஆராதனை ஓ, ஆமாம்... இந்த கூடாரத்தை சேர்ந்த சுவிசேஷக சகோதரரில் ஒருவர். நல்லது, அவர் நம்மை சேர்ந்த ஒருவர். அவர் வெளியில் சென்று போதகராயிருந்து பிரசங்கம் செய்கிறார். ஜே.டி. பார்னெல் என்னும் ஒரு சகோதரர். அவருடைய அருமை தாயார் அன்றிரவு மரித்து விட்டார்கள்- சிறிது கூன் விழுந்து, நரைத்து போன தாய். நாளை அடக்க ஆராதனை கெண்டக்கியிலுள்ள எட்மண்டனில் நடைபெறும். உங்களில் அநேகர் அவர்களுடைய உடலுக்கு மலர்களை வாங்க விரும்பினீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நம்மால் முடியவில்லை. அங்கு சபை பூ வளையம் அனுப்ப ஒரே வழி, தொலைபேசியில் பேசி தபால்காரன் அதைக் கொண்டு செல்வதே. நாளை அது செல்ல வேண்டும். மலர்கள் அதற்குள் அங்கு செல்லுமோ இல்லையோ தெரியவில்லை. எனவே அது மிகவும் கடினமானது, சகோ. பார்னெல் தாயை இழந்து விட்ட விஷயத்தில், அவருடன் எங்கள் அனுதாபத்தை நிச்சயம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதை நான் அண்மையில் செய்தேன். சகோதரி ஸ்பென்சரும் இன்னும் இங்குள்ள மற்றும் சிலரும் நிழல்களினூடேயும் துயரத்தினூடேயும் நடந்து சென்றுள்ளனர். அவர்களுடனும் எங்கள் அனுதாபத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 16இப்பொழுது நாம் சிறிது நேரம் அவருடைய சமூகத்தில் ஜெபத்திற்காக தலை வணங்குவோம். நீங்கள் எனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்றிரவு எனக்குக் காண்பது கடினமாயுள்ளது. இந்த விளக்கு மிகவும் பிரகாசமாயுள்ளது. என் பார்வை நன்றாக இருக்கிறது. ஆனால் கருவிழியை பெரிதாக்க அவர்கள் கண்ணில் மருந்து ஊற்றினர். அது எப்படியிருக்கமென்று உங்களுக்குத் தெரியும். ஆறு நாட்களாக இப்படித்தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் அப்படியே தொடர்ந்து இருக்கும் என்று மருத்துவர் கூறினார். ஆகவே எனக்காக ஜெபியுங்கள். இந்த ஒலிபெருக்கியில் எழும் சத்தம் சுவர்களில் மோதி பிரதிபலிக்கின்றது. எனக்காக ஜெபியுங்கள். உங்கள் கையை என்னால் காணமுடியுமானால், உங்களுக்கு விண்ணப்பம் இருக்குமானால் உங்கள் கையையுயர்த்துங்கள். நாம் பயபக்தியுடன் கூடி தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில் தேவன் ஜெபத்துக்கு பதிலளிப்பார். 17எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இங்கு ஒன்று கூட வேண்டுமென்று நீர் தீர்மானித்திருக்கிறீர். நாளானது சமீபித்து வருகிறதை நாம் காணும்போது, ஒழுங்காக நாம் சபை கூட வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயுள்ளது. அதன் மூலம் நாங்கள் உமக்கு அருகிலும், ஐக்கியங்கொண்டு ஒருவருக்கொருவர் அருகிலும், சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தினால் வரமுடிகிறது. கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். கர்த்தாவே, இங்கு நான் வந்துள்ளதற்காக இதற்கு முன்பு நான் இவ்வளவு நன்றியுள்ளவனாக இருந்ததில்லை.உமக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கண் பார்வையும், செவி கேட்குதலையும் பெற்று, உயிருள்ளவர்களின் மத்தியில் உயிரோடிருந்து, சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசங்கிப்பதற்காக எவ்வளவு நன்றியாயிருக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் போதா. நான் எவ்வாறு மயிரிழையில் உயிர் தப்பினேன் என்று காணும்போது, கர்த்தாவே, அது உம்மை பாராட்டும்படி செய்கிறது. அறிவுள்ளவர்கள் தலையை சொறிந்து, “அது எப்படி முடியும்? தேவனுடைய கரம் மாத்திரமே அதை செய்திருக்க வேண்டும்'' என்னும்போது, கர்த்தாவே, நீர் எனக்கு அற்புதத்தைச் செய்தீர், அது உமது ஊழியக்காரன் நின்று கொண்டிருந்த இடத்தில் செய்யப்பட்டது என்று கண்டு,தாழ்மையுடன் தலை குனிந்து வணங்குகிறேன். நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், இப்பொழுதும் பிதாவே, இங்கு வந்துள்ள இந்நேரத்தில் என் வாழ்க்கையை மறுபடியுமாக உம்முடைய ஊழியத்துக்கென்று பிரதிஷ்டை செய்கிறேன். என் வாழ்க்கையில் இதற்கு முன்பு நான் மரணத்துக்கு இவ்வளவு அருகாமையில் வந்து, பிழைத்ததில்லை. எனவே நான் நன்றி கூறுகிறேன். 18இந்த இரவில் இங்கு கரங்களையுயர்த்தியுள்ள எல்லோருக்காகவும் ஜெபிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்ணப்பம் உண்டு, அவர்களில் அநேகர்? ஏறக்குறைய எல்லோரும் - நீர் அவர்களுக்கு செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் தங்கள் இருதயத்தில் நன்றியுள்ளவர்களாயிருக்கின்றர். ஒரு விசேஷித்த சமயத்தில் இன்றிரவு கூடி வந்திருக்கிறோம் - அதாவது 'உரையாடல்' (communion) அல்லது ''கர்த்தருடைய இராப்போஜனம்'' என்று நாங்கள் அழைக்கும் அதில் பங்குகொள்ள .கர்த்தாவே, அதை தான் நாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்; எங்கள் கர்த்தருடன் ஐக்கியங்கொண்டு, அவருடன் உரையாடி, அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறோம். பிதாவே, எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் நீர் திரும்ப எங்களுடன் உரையாட வேண்டுமென்று ஜெபிக்கிறோம். எங்கள் இருதயத்தில் ஏதாவதொன்றை தந்து, எங்கள் பயணத்தை நிலைவரப்படுத்தி, எங்களுக்கு புதிய தைரியத்தை தரும். கர்த்தாவே, எங்கள் போதகரை, அந்த விலையேறப்பெற்ற சகோதரனை, உமது ஊழியக்காரனை, அவருடைய மனைவி பிள்ளைகளை, டீகன்மார்களை, தர்மகர்த்தாக்களை, சபைக்கு வரும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பீராக. ஓ தேவனே, எங்களை உம்மிடம் கிட்டிச்சேர்த்துக்கொள்ளும். கவிஞன் கூறின வண்ணமாக, “எங்கள் இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் அந்த இணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக. ஓரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும் .'' கர்த்தாவே, அதை அருளும் உலகெங்கிலும் உம்மை தொழுது கொள்பவர்களை ஆசீர்வதிப்பீராக. இப்பொழுதும் பிதாவே, உம்மிடம் காத்திருக்கும் இவ்வேளையில், ஜீவ அப்பத்தை பிட்டு எங்களுக்குத் தாரும். உமது அன்புள்ள பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 19ஒரு போதகர் வேதத்திலிருந்து வாசிக்கும் வசனங்களை குறித்துக்கொள்ள அநேகர் விரும்புவது வழக்கம். நான்... இன்று பிற்பகல் நான் சகோதரன் சகோதரி உட்டுடன் வெளியே சென்ற பிறகு...... நாங்கள் சகோ. கோபல் ராபர்ஸனை அவருடைய கண்காட்சி அறையில் காணச் சென்றிருந்தோம். நாங்கள் திரும்பி வந்த பிறகு. நான் எண்ணினேன்...... நமது போதகர் இன்று காலை எவ்வளவு அருமையான ஒரு செய்தியைக் கொடுத்தாரென்று சகோதரி உட் என்னிடம் கூறினார்கள். பாவம், அந்த மனிதனுக்கு தொண்டை புண் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணினேன். எனக்கும் கூட தொண்டைப் புண் உள்ளது. அவர் என்னைப் பேசக் கேட்டுக் கொண்டால், அதை நாம் பகிர்ந்து கொள்ளலாமே என்று எண்ணினேன். எனவே நான் பேசுவதற்கு வேண்டிய சில குறிப்புகளை எழுதிக் கொண்டேன். 20முதலாவதாக நாம் வேதாகமத்தை திருப்பி, 2 கொரிந்தியர் 6:7 முதல் 10 வசனங்களை வாசிப்போம். 6ம் அதிகாரம், 7ம் வசனம் முதல் 10ம் வசனம் முடிய. பிறகு ஆதியாகமம் 14:18 முதல் 19 வசனங்கள். கர்த்தருக்கு சித்தமானால் இந்த வசனங்களிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது நான் முதலாவதாக 2 கொரிந்தியர் 6:7 முதல் 10 வசனங்களை படிக்கப் போகின்றேன். @@சத்திய வசனத்திலும், திவ்விய பலத்திலும், நீதியாகிய வலதிடது பக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும் கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும், எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னபட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர் களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப் பண்ணுகிறோம் 2 கொரி. 6:7-10 ஆதியாகமம் 14: 18, 19 வசனங்கள்: அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்து, அவனை ஆசிர்வதித்து, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக ஆதி. 14:18-19 21இதை நான் பொருள் என்று அழைக்க முடியுமானால், நான் ''சகலத்தையுமுடையவர்களாக இருத்தல்'' என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். இந்த கொரிந்தியர் நிருபத்தில், நாம் தரித்திரர் என்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாக இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. ''சகலத்தையுமுடையவர்களாக இருத்தல்''. அது எனக்குப் பிரியம். ஆதியாகமத்தில் ஆபிரகாம் மெல்கிசேதேக்கு என்னும் இந்த பெரிய மனிதனை சந்திக்கிறான் என்று படிக்கிறோம். அவர் வானம் பூமி இவையிரண்டையும் உடையவர். அதாவது சகலத்தையும் உடையவர். 22நமக்கு ஆபிரகாமின் வரலாறும் என்ன நடந்ததென்றும் தெரியும். அவன் தன் பணியை செய்ய அழைக்கப்பட்டான். அவன் கல்தேயர் தேசத்திலிருந்து ஊர் என்னும் பட்டினத்திலிருந்து - வெளியே அழைக்கப்பட்டான். அங்கு அவன் தன் தந்தையுடனும் தன் ஜனங்களுடனும் தங்கியிருந்தான். அது சிநேயார் பள்ளத்தாக்கில் இருந்தது. ஒருக்கால் அது வளமான தேசமாக இருந்திருக்கும். ஆபிரகாம் உலகத்தின் பார்வைக்கு விசேஷமான ஒருவன் அல்ல என்று நாம் காண்கிறோம். அதாவது அவன் ஒரு சிற்றரசன், பேரரசன் அல்லது அதிபதியாக இருக்கவில்லை. அவன் ஒரு சாதாரன மனிதன். அவன் சாராள் என்னும் தன் ஒன்று விட்ட சகோதரியை மணம் புரிந்திருந்தான். அவள் இளம் பெண்ணாயிருந்தபோது, ஒருக்கால் அவளை மணம் புரிந்திருப்பான். அவனுடைய எழுபத்தைந்தாம் வயதில் தேவன் சேவைக்கென அவனை அழைத்தார் அவனுடைய வாழ்க்கை துணைவி உட்பட. 23இங்கு நாம் தொடங்குவோம். தேவன் ஒருவனை தமது சேவைக்கென அழைக்கும் போது, அவனுடன் கூட அவனுடைய வாழ்க்கைத் துணைவியையும் அழைக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவனுடன் கூட அவனுடைய மனைவியையும் அழைக்கிறார். ஏனெனில் இருவரும் ஒருவரே. சிறிது கழிந்த பின்பு- இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து - சாராள் தூதனின் செய்தியை சந்தேகித்ததன் நிமித்தம் தேவன் அவளை கொன்றிருக்கக் கூடும். அவர்கள் அன்றைய தினம் ஓக் மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டிருந்தனர். சாராள் தாயாகப் போகிறாள் என்று தூதன் ஆபிரகாமிடம் கூறின போது, சாராள் உள்ளத்தில் நகைத்து, 'நான் கிழவியாயிருக்க, அது எப்படி ஆகும்?'' என்றாள். அவளுக்கு தொண்ணுறு வயது, அவள் புருஷனுக்கு நூறு வயது. அவளுடைய கர்ப்பப்பை அநேக ஆண்டுகளாக உலர்ந்து போயிருந்தது. அவனுடைய சரீரம் செத்துப் போயிருந்தது. அப்படியிருக்க, அவளுக்கு எப்படி தன் புருஷனிடம் இன்பம் உண்டாயிருக்கும்? அவள் உள்ளத்தில் நகைத்தாள். தூதன், தன் முதுகை கூடாரத்தின் பக்கம் திருப்பினவனாய், ''சாராள் ஏன் நகைத்தாள்?'' என்றான். அவள் அதை மறுத்தாள், அது தேவனுடைய முகத்தை நோக்கி அவர் சொல்வது தவறென்று கூறுவது. அது அவளுடைய உயிரை எடுத்திருக்கும். ஆனால் சாராள் ஆபிரகாமின் ஒரு பாகமாக இருந்ததால், தேவன் அவளைக் கொல்ல முடியவில்லை. பாருங்கள்? அவள் அவனுடன் உடன்படிக்கையில் இருந்தாள். எனவே அவள் அவனுடன் செல்ல வேண்டியதாயிற்று. எனவே ஆபிரகாமின் பாகமாக இருந்த சாராளை அவர் கொல்ல முடியவில்லை. ஏனெனில் இருவரும் ஒருவரே. 24இது இன்றைக்கு நம்முடைய நிலைக்கு எடுத்துக் காட்டாயுள்ளது. நாம் அபாத்திரர், பாவம் செய்ததனால் மரணத்துக்குப் பாத்திரர். ஆனால் தேவன் நம்மைக் கொல்ல முடியாது. ஏனெனில் அவர்... நாம் கிறிஸ்துவின் ஒரு பாகமாக இருக்கிறோம். பாருங்கள்? அது கிருபையினால் உண்டான ஒன்று. நாம் கிறிஸ்து வுடன் ஒன்றுபட்டிருக்கிறோம். கிறிஸ்துவுடன் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பது அழகான கருத்தல்லவா? எனவே, நாம் பாவங்களைச் செய்யும்போது, உடனே “நாம் தவறு செய்து விட்டோம்' என்று அறிக்கை செய்யவேண்டும். இல்லையென்றால் தேவன் நம்முடைய உயிரை எடுத்துக் கொள்வார். நம்முடைய ஸ்தானத்தில் இரத்தம் பதிலளிக்கிறது. தேவன் அந்த இரத்தத்தை கடந்து வர முடியாது. பாருங்கள்? அவரால் அப்படி செய்ய முடியாது. ஏனெனில் அவர் அப்படி செய்வதில்லையென்று வாக்களித்திருக்கிறார். எனவே அவர் தமது வாக்குறுதியை மீற முடியாது. பாருங்கள்? தேவன் அதற்கு கட்டுப்பட்டிருக்கிறார். பாருங்கள், அவரால் தமது வாக்குறுதியை மீற முடியாது. அவர் இரத்தத்தின் மூலம் அதை வாக்களித்து, அதை விசுவாசிப்பவர் அனைவரும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த வாக்குத்தத்தத்தை அவர் மீற முடியாது. 25எனவே ஆபிரகாம் கீழ்ப்படிந்தவனாய், தன் வீட்டாரை விட்டு, தன் தேசத்தை விட்டு, எல்லாவற்றையும் விட்டுப் பிரிந்து, உலகத்தில் தனக்கிருந்த சுதந்தரத்தை விட்டுப் பிரிந்து அந்நிய தேசத்துக்குப் பிரயாணப்பட்டு சென்றான். அது சபைக்கு ஒரு முன்னடையாளம். நாம் உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட்டு, கிறிஸ்துவைப் பின்பற்ற கூறப்பட்டுள்ளோம். ஆபிரகாம் இப்படியாக ஆண்டுக்குப் பின் ஆண்டு சென்று கொண்டிருந்தான் என்று நாம் காண்கிறோம். அவன் சில பங்கை தன்னுடன் கொண்டு சென்றான். அது அவன் தகப்பன். அவன் வழியில் மரித்துபோனான். அவன் தன் மருமகன் லோத்தை தன்னுடன் கொண்டு சென்றான். தர்க்கம் நேர்ந்ததன் விளைவாக லோத்து பிரிந்து சென்று சோதோமில் வாசம் பண்ணினான். ஆயினும் அவன் ஆபிரகாமின் ஒரு பாகமாக இருந்தான். தேவன் ஆபிரகாமுக்கு அந்த தேசத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் கொடுத்தார். ஆபிரகாம் அவை எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியானான். தேவன், “நீ கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே பார். இவையனை த்தும் உனக்கும் உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் சொந்தமானவை. இவையெல்லாம் உனக்கே'' என்றார். 26ஒரு நாள் ஆபிரகாமுக்கு அது கடினமாகவும், பாவத்தில் உழன்று கொண்டிருந்த லோத்துக்கு அது எளிதாகவும் இருந்தது. பாவம் எவ்வளவு எளிதாகவும் இனிமையாகவும், பகடற்றதாகவும் காணப்படுகிறது!லோத்து, ''நான் விசுவாசிக்கும் வரைக்கும் நான் தேவனை விசுவாசிக்கிறேன். எனவே நான் ஏன் சோதோமுக்குச் செல்லக் கூடாது? நான் செய்வது சரியே. நான் ஒரு விசுவாசி'' என்று சொல்லியிருப்பான். ஆனால் அவன் செய்தது சரியல்ல. பாருங்கள், தேவன் ஆபிரகாமை அழைத்தபோது, அவன் எல்லாவற்றையும் விட்டுப் பிரிந்து வரவேண்டுமென்று கூறினார். நாமும் அதைத்தான் செய்யவேண்டும். தேவன் நம்மை பாவத்திலிருந்து முழுவதுமாக பிரிந்து வரும்படி அழைக்கிறார். ''அதை விட்டு வெளியே வா. அதற்கு உடன்படாதே“. பொல்லாங்கை காணும்போது அதை உதறித் தள்ளு. அதிலிருந்து முழுவதுமாக பிரிந்து வா. அதிலிருந்து வெகு தூரம் வந்து விடும். அது எவ்வளவு நல்லதாக தென்பட்டாலும், அதன் மேல் நடந்து செல்லாதே. 27இங்குள்ள நீங்கள், சகோ. பிரன்ஹாமே, சில சமயங்களில் திருட வேண்டும் என்னும் சோதனை ஏற்படுகிறது. புகை பிடிக்க வேண்டும் என்னும் சோதனை ஏற்படுகிறது எனலாம். பெண்களும் அவ்வாறே, ''உலகப்பிரகாரமான பெண்களைப் போல் அவலட்சணமான உடைகளை உடுத்த வேண்டும், என்னும் சோதனை உண்டாகிறது'' எனலாம். வாலிபப் பெண்கள் அது சோதனை என்று நீங்கள் எண்ணலாம், அப்படியானால் ஊழியத்திலுள்ளவர்களைக் குறித்தென்ன? அவர்கள் ஒவ்வொரு அசைவையும் ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டியவர்களாயிருக்கின் றனரே அது எவ்வளவு பெரிய பொறுப்பு உங்களைக் காட்டிலும் அவர்கள் நியாத்தீர்ப்பின் போது அதிகமாக பதில் கூற வேண்டியவர்களாயுள்ளனர். நீங்கள் உங்கள் ஆத்துமாக்களுக்கு மாத்திரமே பதில் கூற வேண்டும். நாங்களோ, நாங்கள் பிரசங்கிக்கும் அனைவருக்காகவும் பதில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? எனவே சாத்தான் தொடர்ச்சியாக நீங்கள், ''அது அழகான உடையல்லவா? அதை உடுப்பது தவறு தான். ஆனால் அது அழகாயிருக்கிறதல்லவா? அது எனக்கு சரியான அளவாக இருக்கும்'' எனலாம். அது என்னைப் பொறுத்த வரையில் .... அது தவறென்று உங்களுக்குத் தெரியும். ஒரு போதகரிடம், 'நீங்கள் இங்கு நடக்கும் கூட்டத்துக்கு செல்ல வேண்டும். அது மிகவும் நன்றாயுள்ளது என்று சபையோர் கூறுகின்றனர்' என்று யாராகிலும் ஒருவர் கூறினால், நீங்கள் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து, அவர் 'போ' என்று சொன்னால் மாத்திரமே போக வேண்டும், பாருங்கள். ''ஓ, அங்கு சென்று அந்த நபரைக் காண்பீர்களா? அது இப்படி இப்படி உள்ளது.'' நீங்கள் அதைக்குறித்து மிகவும் கவனமாயிருக்க வேண்டும். பாருங்கள்? ஓ, அது மிகவும் தந்திரமுள்ளது. இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து நாம் மிக கவனமாயிருக்க வேண்டும். ஆபிரகாமும் கூட கவனமாயிருக்க வேண்டியதாயி ருந்தது. அவன் லோத்துடன் சோதோமுக்குச் செல்வதற்கு பதிலாக தன்னைப் பிரித்துக்கொண்டு, வனாந்தரத்துக்கு சென்று, நிந்தைப்படும் கர்த்தருடைய சிலருடன் தன் வழியைத் தெரிந்து கொண்டான். அதுவே நம்முடைய மனப்பான்மையாய் இருக்க வேண்டும். அது கடினமானாலும், எளிதானாலும், நாம் தேவனுடைய ஜனங்களின் வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும், அவர் எங்கு கூப்பிட்டாலும், நீங்கள் செல்ல ஆயத்தமாயிருங்கள். 28இதன் பிறகு ஒரு ராஜா ஒரு சிறு கூட்டம் ஜனங்களுக்கு எதிராக சண்டையிட்டு பள்ளத்தாக்கு முழுவதிலும் சென்று, அங்கிருந்த சிறு குழுக்களை, சிறு ராஜ்யங்களைக் கைப்பற்றி, சோதோமுக்கு நுழைந்து, சோதோமின் ராஜாவை சிறைபிடித்து, லோத்தையும் (ஆபிரகாமின் மருமகன்), அவனுடைய மனைவி, பெண்களையும், அவர்களுடைய ஐசுவரியம் அனைத்தையும் கொள்ளையடித்து, தேசத்தையே துடைத்து, எல்லாவற்றையும் கொண்டு சென்றுவிட்டான். ஓ, அது எவ்வளவு பயங்கரமான காரியம்! பாவத்தின் சம்பளம் மரணம். லோத்து இதை உணர்ந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அவன் ஒரு அடிமையாய், கழுத்தில் கயிறு அல்லது சங்கிலி கட்டப்பட்டவனாய் இங்கும் அங்கும் நடந்து, அதை யோசித்துப் பார்த்திருப்பான். அவனுடைய பெண்கள் கற்பழிக்கப்பட அங்கிருந்தனர். அவனுடைய மனைவியும் மற்றவரும் எந்த நேரத்திலும் மரிக்கக்கூடும். அவன் ஒரு கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனான். அதன் விளைவாக அவன் வேறொரு ராஜ்யத்துக்கு சிறை கொண்டு போகப்பட்டு, தன் வாழ்நாள் முழுவதும்அடிமையாக அங்கு காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 29ஆபிரகாம் அவனுடைய ஒரு பங்கான லோத்து சிறை பிடித்துக்கொண்டு செல்லப்பட்டான் என்று கேள்விப்பட்டபோது, ''தேவனே, உமக்கு நான் கீழ்ப்படிந்தால், இந்த தேசத்தில் நான் காலடிவைத்த இடம் எல்லாம் எனக்குத் தருவதாகவும் அது எனக்கு சொந்தமானது என்றும் வாக்களித்தீர். லோத்து இதன் ஒரு பாகமாயிருக்கிறான். அவனை மீட்டுக் கொண்டுவர நான் புறப்பட்டு செல்கிறேன்'' என்று கூறியிருப்பான். எனவே அவன் தன் வேலையாட்களை கூட்டிச் சேர்த்து, அவர்களுக்கு ஆயுதங்களைத் தரிப்பித்து, இந்த ராஜாவையும் மற்ற சிறு ராஜாக்களையும் கண்டுபிடிக்கும் வரைக்கும் துரத்தி சென்றான். அது எவ்வளவு பெரிய சேனையாயிருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஆனால் அவன் பெரிய தளபதியாகிய தேவனின் வழி நடத்துதலைக் கொண்டவனாய், தன்னை பிரித்துக் கொண்டு, அவர்கள் மேல் விழுந்து, ராஜாக்களை கொன்று போட்டு, லோத்தையும், மற்ற சிறு ராஜ்யங்களிலிருந்தவர்களையும் மீட்டெடுத்து, அவர்களுடைய தேசத்தில் அவர்களைக் கொண்டுவந்தான். எதிரியைத் துரத்தி எல்லாவற்றையும் கைப்பற்றின ஆபிரகாமில் கிறிஸ்து எவ்வளவு அழகாக சித்தரிக்கப்படுகிறார் கிறிஸ்துவும் அவ்வாறே வந்து நம்மை மீட்டுக்கொண்டார். 30ஆபிரகாம் வெற்றியடைந்து திரும்பி வரும் வழியில் வானத்தையும் பூமியையும் உடையவரான மெல்கிசேதேக்கை சந்தித்தான் என்று இந்த பெரிய வரலாற்றில் நாம் காண்கிறோம். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜா. சாலேம் என்பது எருசலேம், சமாதானப் பிரபு, நீதியின் ராஜா. அவர் தகப்பனும் தாயும் இல்லாதவர். அவருக்கு துவக்கமுமில்லை, முடிவுமில்லை. அது சர்வ வல்லமையுள்ளவரைத் தவிர வேறொவரும் இல்லை. ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து திரும்பி வரும் வழியில் மெல்கிசேதேக்கை சந்தித்தான். அவன் வானத்தையும் பூமியையும் உடையவரைச் சந்தித்தான். சகலத்தையுமுடையவர் எதிர்கொண்டு போய் அவனைச் சந்தித்தார். என்ன ஒரு மகிமையான காரியம்! இப்பொழுது ஆபிரகாம்... இது எனக்கு பிரியம். ஆபிரகாம் வாக்குத்தத்தத்தின்படி எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியானான். எனவே தேசத்திலுள்ள எல்லாவற்றின் மேலும், தேசத்தையே அவன் சொந்தம் பாராட்ட முடிந்தது. ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தேசத்திலேயே மிகவும் ஏழ்மையாயிருந்தவன் ஆபிரகாம் என்று நாம் அறிகிறோம். ஏனெனில் அவன் வனாந்தரத்தில் வாழ்ந்தான். அவன் தேவனுடன் சமாதானமாக வாழ்ந்தான். ஆனால் லோத்து ஐசுவரியவான். அவன் பட்டினத்தில் வாழ்ந்து அந்த பட்டினத்தின் தலைவராக நியமிக்கப்பட்டான். அவன் வாசலில் உட்கார்ந்து கொண்டு, பட்டினத்திலிருந்த ஜனங்களை நியாயம் விசாரித்தான். அவனுக்கு எல்லாவிதமான ஐசுவரியமும் இருந்தது. ஆனால் ஆபிரகாமோ வனாந்தரத்தில் வாசம் செய்தான். அவன் தேசத்திலிருந்த அனைவரிலும் மிகவும் தரித்திரனாய் இருந்திருக்கக்கூடும். எனினும் அவன் சகலத்தையும் உடையவனாயிருந்ததாக உரிமை பாராட்டினான். ஆமென். அதுதான் எனக்கு பிரியம். 31ஓ, இன்றிரவு, நாம் உலகத்தின் பொருட்களால் ஐசுவரியமில்லாதவர்களாய் இருக்கலாம். ஆயினும் நாம் சகலத்தையும் உடையவர்களாய் இருக்கிறோம். சபை சகலத்தையும் உடையதாயிருக்கிறது. தரித்திரர் என்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாக இருக்கிறோம். அது எனக்குப் பிரியம். அவர் நாம் அப்படியிருக்கிறோம். அநேக ஆண்டுகளுக்கு முன்பு ''என் பிதா ஐசுவரியமுள்ளவராய் வீடுகளையும் நிலங்களையும் உடையவராயிருக்கிறார். அவர் உவகத்தின் ஐசுவரியத்தை தம் கரங்களில் பிடித்திருக்கிறார். அவருடைய பொக்கிஷம் செம்பு, இரத்தினம், வெள்ளி, பொன் ஆகியவைகளால் நிறைந்துள்ளது. அவருக்கு சொல்ல முடியாத ஐகவரியம் உண்டு“ என்னும் பாடலை நாம் பாடுவது வழக்கம். நமக்கு அவைகளெல்லாம் சொந்தம். ஏனெனில் நாம் ராஜாவின் புத்திரர். ஆமென். பிள்ளை தகப்பனுடைய உடமைகளுக்கு சுதந்தரவாளி என்று நமக்குத் தெரியும், சரி. ஆபிரகாம் அதன் மேல் சொந்தம் பாராட்ட முடிந்தது. ஆயினும் அவன் தரித்திரனாயிருந்தான். அவனுடைய ஆடு மாடுகள் பட்டினியால் தவித்தன. லோத்து மிகவும் செழிப்பான நிலத்தை எடுத்துக் கொண்டான். ஆபிரகாமுக்கு தண்ணீர் குறைவுபட்டது, உஷ்ணமான நாட்கள். ஆடு மேய்ப்பவர்களுக்கு கஷ்டம் உண்டானது. எல்லாமே ஆபிரகாமுக்கு தவறாக நடந்தது போல் தோன்றுகிறது. இருப்பினும் அவனுக்கு சகலமும் சொந்தமாயிருந்தது. 32இன்றைக்கு உண்மையான விசுவாசி ஜனங்களால் தள்ளி விடப்பட்டு, ''மூட மனிதாபிமானி, உருளும் பரிசுத்தன்'' அல்லது அப்படிப்பட்ட நிந்தையான பெயர்களால் அழைக்கப்படுகிறான். அவன் ஏதோ ஒருவிதமான மூட மனிதாபிமானி என்று கருதப்படுகிறான். இருப்பினும் அவன் வானம் பூமி முழுவதற்கும் சுதந்தரவாளியாயிருக்கிறான். ''சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்''. ஓ, என்னே நீங்கள் சிறு குடிலில் வாழ்ந்து, உங்கள் வாடகையை செலுத்த போதிய பணமில்லாதவர்களாயிருந்தும் சகலத்துக்கும் சொந்தமானவர்களாயிருக்கிறீர்கள். ஆமென். சில காசுகள் சம்பாதிக்க வியர்க்க வியர்க்க கடினமாக உழைத்து... நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து, உங்கள் பிள்ளைகளுக்கு காலணிகளை வாங்கித்தந்து, பசியாயுள்ளவர்களின் வாய்களுக்கு உணவு கொடுக்கிறீர்கள். ஆயினும் நீங்கள் எல்லாவற்றிற்கும் சொந்தமானவர்களாய், இங்குள்ள அனைத்துக்கும் சுதந்தரவாளியாயிருக்கிறீர்கள். “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். ''ஓ, என்னே ,அது எனக்கு பிரியம்! பூமியை உடையவன். அது யார்? விசுவாசி. ”விசுவாசி அண்டசராசரங்கள் அனைத்துக்கும் சொந்தமானவனாயிருக்கிறான்' என்னும் உரிமை பத்திரத்தை இயேசுகிறிஸ்துவிடமிருந்து பெற்றிருக்கி றான். அது உண்மை. ''சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்'' 33ஆபிரகாம் அந்த தேசத்தையும் அதிலுள்ள எல்லா வற்றையும் தனக்குச் சொந்தமாக பெற முடிந்தது. தேவன் அதை அவனுக்குக் கொடுத்தார். லோத்து அந்த தேசத்தின் ஒரு பாகமாயிருந்தான். எனவே ஆபிரகாமுக்கு அதன் பேரிலும் உரிமையிருந்தது. அவன் அதன் மேல் உரிமை பாராட்ட முடியும். அவன், “இப்பொழுதும் தேவனே, இந்த தேசமும் இதிலுள்ள அனைத்தும் எனக்குச் சொந்தமானவை என்று நீர் வாக்களித்தீர். என் உறவினன் சிறைபிடித்து கொண்டு போகப்பட்டான். அவனுக்கிருந்த எல்லாமே போயிவிட்டது'' என்றான். இந்த நாளுக்கு இதை பொருத்துவோமானால், சபையானது, ''கர்த்தராகிய தேவனே, இதோ என் சகோதரன், அவர் புற்று நோயால் பீடிக்கப்பட்டு கிடக்கிறார், அவர் காசநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்னின்னது உள்ளது. நான் வாக்குத் தத்தத்தை பற்றிக்கொள்கிறேன். அது என்னுடையது. நீர் அப்படி சொல்லியிருக்கிறீர்'', என்று சொல்லமுடியும். ஆமென்! பார்த்தீர்களா? அதன் பிறகு நீங்கள் சத்துருவாகிய பிசாசை துரத்தி, ஆபிரகாம் எப்படி ராஜாக்களை முறியடித்து, சகல பொருட்களையும் திருப்பிக்கொண்டு வந்தானோ, அப்படியே நீங்களும் செய்ய முடியும். ஆமென். அது எனக்குப் பிரியம். அது விசுவாசிக்கு அருளப்பட்டுள்ளது. 34ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தின் பேரில் உரிமையிருந்தது. வாக்குத்தத்தம் அவனுடையதாயிருந்த போதிலும், அதைப் பெற்றுக்கொள்ள அவன் போராட வேண்டியிருந்தது. ஆமென். பார்த்தீர்களா? இன்றைய விசுவாசி நாம் சகலத்துக்கும் சுதந்தரவாளியாயிருக்கி றோம். எல்லாவித ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கும், எல்லாவித சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கும், வேதம் வாக்களித்துள்ள ஒவ்வொரு ஆசீர்வாதத்துக்கும் நாம் சுதந்தரவாளியாயிருக்கிறோம். இருப்பினும் நீங்கள் ஒவ்வொரு அங்குலமும் போராட வேண்டியதாயுள்ளது. அப்படித்தான் தேவன் அதை நியமித்திருக்கிறார். அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. உங்களுக்கு சொந்தமானது என்று நீங்கள் அறிந்துள்ளதை பெற்றுக் கொள்ள நீங்கள் போராட வேண்டும். அதைத்தான் நாம் இப்பொழுது செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். 35நீங்கள், 'சகோ. பிரன்ஹாமே, எனக்கு சுகம் தேவை எனலாம். வாக்குத்தத்தம் உங்களுடையது. ஆனால் அதை நீங்கள் எளிதில் பெற முடியாது என்று உங்களுக்கு சொல்லுகிறேன். அதை சாத்தானிடத்திலிருந்து நீங்கள் பறித்துக்கொள்ள வேண்டும். சாத்தான் உங்கள் ஆரோக்கியத்தை கைப்பற்றிக் கொள்கிறான். நீங்கள் சாத்தானிடம் சென்று, ''அதை எனக்குத் திரும்பக் கொடுத்து விடு. நான் வானத்துக்கும் பூமிக்கும் சொந்தமானவரான கர்த்தரின் நாமத்தில் வருகிறேன். நான் அவருடைய சுதந்தரவாளி. திரும்பக் கொடுத்து விடு என் பிள்ளையை நீ எடுத்து, அவள் தவறான பையனுடன் பழகும்படி செய்துவிட்டாய். என் பையனை நீ எடுத்து, தவறான பெண்ணுடன் பழகும்படி செய்துவிட்டாய். அவர்களை நான் உரிமை கோருகிறேன் என் பிள்ளைகளை நான் உரிமைகோருகிறேன். என் சகோதரனை நான் உரிமை கோருகிறேன். என் சகோதரியை நான் உரிமை கோருகிறேன். ஆம், சாத்தானே, அவர்களிடம் நயமாய் பேசி, தேவனுடைய வீட்டிலிருந்து அவர்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாய். அவர்களுக்குப் பின்னால் நான் வருகிறேன். அவர்களை உரிமை கோருகிறேன்,என்று சொல்ல உங்களுக்கு உரிமையுண்டு. ''நல்லது, உனக்கு எப்படித் தெரியும்?'' ''நான் சகலத்துக்கும் சுதந்தரவாளி. ஆமென். அது எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் சுதந்தரவாளி. தேவன் எனக்கு வாக்களித்துள்ள அனைத்தின் மேலும் நான் உரிமை பாராட்ட முடியும்''. ஆமென். பார்த்தீர்களா? என்னே! 36அதை எப்படி நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். ஏதாவதொன்றை நீங்கள் செய்ததன் மூலமா? இல்லை, ஐயா. தகுதியற்ற நமக்கு அது தேவன் அளித்த ஈவு. அது நம்முடையது. அது நமக்குச் சொந்தமானது. நீங்கள் அதிகாரமுள்ள தேவனுடைய வசனத்தைக் கொண்டவர்களாய் விசுவாசத்துடன் சாத்தானிடம் சென்று, “அது என்னுடையது அதை கீழே வைத்துவிடு!'' என்று கூறுவீர்களானால், சாத்தான் அதை பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. ஆமென். மகிமை! அது எனக்குப் பிரியம். ''சாத்தானே, அதை கீழே வைத்து விடு. அதை என்னிடமிருந்து பறித்துக் கொண்டாய். அதை திரும்பக் கொடுத்துவிடு. உனக்கு நோட்டீஸ் கொடுக்கிறேன். ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்னும் வார்த்தை அடங்கிய நோட்டீஸை இங்கு எழுதி வைத்துள்ளேன். எனவே இந்த நோட்டீஸ் உடன் வந்திருக்கிறேன். அதை உனக்களிக்கப் போகிறேன். என் பிதாவின் நாமத்தில் நான் எதைக் கேட்டாலும் அதை அவர் எனக்குத் தந்தருளுவதாக இயேசு கூறியுள்ளார். இந்த மலையைப் பார்த்து 'பெயர்ந்து போ' என்று சொல்லி, நான் சொன்னபடியே நடக்கும் என்று என் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நான் சொன்னபடியே ஆகும். அதை கீழே வைத்து விடு!'' அது அவனை ஓடத்துவங்க வைக்கிறது ஓடத்துவங்குவ தில்லை. ஓடும்படி செய்கிறது. அதை கீழே வைத்துவிடு. நான் வேத அதிகாரத்துடன் வந்திருக்கிறேன். நான் விசுவாசி. ''உங்களுக்கு விளங்குகிறதா? ஆம், ஐயா. ஆம், ஐயா. 37அதைப் பெற்றுக்கொள்ள ஆபிரகாம் முதலில் என்ன செய்ய வேண்டியிருந்தது? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தை என்னும் கன்மலையாகிய அஸ்திபாரத்தின் மேல் அவன் தன் விசுவாசத்தை வைக்க வேண்டியதாயிருந்தது. கவனியுங்கள், அவனுக்கிருந்த எல்லாம் ஒரு கூட்டம் வேலையாட்கள்- ஒருக்கால் பன்னிரண்டு பேர் இருந்திருக்கலாம். ஆனால் மற்றவர்களோ ஆயுதந்தரித்த பல ஆயிரம்பேர். ஆபிரகாமின் ஆட்கள் இராணுவ வீரர்கள் அல்ல. அவர்கள் வேலையாட்கள், ஆடு மேய்ப்பவர்கள். அவர்கள் துருபிடித்த கத்திகளை எங்கிருந்தோ பொறுக்கி எடுத்திருப்பார்கள். அநேக முறை மழை அவைகளின் மேல் பெய்து அவை துருபிடித்திருக்கும். ஆனால் ஆபிரகாம் துருபிடித்த கத்திகளை நோக்கவில்லை; அவர்களிடம் கேடயமே இல்லை. அவன் தன்னுடைய விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையின்மேல் வைத்திருந்தான். பார்த்தீர்களா? அதுதான் அதை நிறைவேறச் செய்கிறது. அதுதான். ''அங்கு சென்ற பின்பு அவர்களுடன் எப்படி சண்டையிடப் போகிறாய்?'' அது எனக்குத் தெரிய வேண்டிய விஷயமல்ல. நான் செய்ய வேண்டியது தேவன் கூறினதன் பேரில் என் விசுவாசத்தை வைப்பதே. அது என்னுடையது. எனக்கு சொந்தமானதின் பின்னே செல்கிறேன்.''ஆமென். வியாதியஸ்தர்களுக்கு அதை கண்டு கொள்ள முடியுமானால், அந்த நேரத்திலேயே வியாதி போய் விடும். பாருங்கள்? நிச்சயமாக. 38ஒரு பாவி, தான் பாவம் செய்ய வேண்டியதில்லை என்று கண்டுகொள்ளும் போது அநேகர் பாவம் செய்ய வேண்டியிருப்பதனால் பாவம் செய்கின்றனர். நீங்கள் பாவம் செய்து தானாக வேண்டும்'' என்று கூறினால், அது மிகவும் பரிதாபமான ஒரு காரியம். ஆனால் நீங்கள் இனி பாவம் செய்ய வேண்டியதில்லை என்று உணர்ந்து கொள்ளும் போது! உங்கள் முகத்தை நோக்கி சபித்து கேலி செய்து உங்களை 'மடையன்' என்று கூப்பிடும் ஜனங்கள் உள்ளனர். அவர்கள் மனப்பூர்வமாக பாவம் செய்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. ஆனால் ஒன்றை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கும் மனிதனுக்கு.... அவர்களுக்கு அதை செய்ய விருப்பமில்லை, அவன் திருடுகிறான், அவனுக்கு அதை செய்ய விருப்பமில்லை. அவன் பொய் சொல்லுகிறான், அப்படி செய்ய அவனுக்கு விருப்பமில்லை. அவனுக்கு விருப்பமில்லாத காரியங்களை அவன் செய்து கொண்டிருக்கிறான். அவன் பாவியாயிருக்க அவனுக்கு விருப்பமில்லை. அப்படிப் பட்ட ஒருவனுக்கு நம்பிகையுண்டு - சத்தியம் என்னவென்று அவன் காணும்படி நீங்கள் செய்வீர்க ளானால். பாருங்கள்? தேவனுடைய வாக்குத்தத்தத்தி னிடம் வந்து, உங்கள் விசுவாசத்தை அதன் மேல் வைத்து, சத்துருவினிடம் செல்லுங்கள். அவனால் அதை இனி ஒரு போதும் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது, அவ்வளவுதான். ஏனெனில் அது உங்களுடையது. 39இப்பொழுது இந்த ஆளைப் பார்ப்போம். ஆபிரகாம், “நான் சுதந்தரவாளி. இது எனக்குச் சொந்தமானது. தேசத்திலுள்ள அனைத்தும் என்னுடையவை. ஏனெனில் தேவன் .... அதை இன்னும் நான் பெற்றுக்கொள்ளவில்லை'' என்கிறான். ஆனால் அவன் அதை பெற்றிருந்தான். அது எப்படியும் அவனுடையதா யிருந்தது. நாம் சகலத்துக்கும் சுதந்தரவாளிகளாயிருக்கின் றோம். அது சரியா? நாம் சற்று முன்பு படித்த வேதபாகம் அவ்வாறு கூறுகின்றது. நாம் சகலத்துக்கும் சுதந்தரவாளிகளாயிருக்கிறோம் - சகலத்துக்கும். அதை இன்னும் நாம் பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அது நம்முடையதே. ஆமென். ஓ , மகிமை! நான் நிலத்தில் ஒரு அங்குலம் கூட சொந்தமாகப் பெற்றிருக்கவில்லை. ஆயினும் எப்படி யானாலும் அதெல்லாம் என்னுடையதே நிச்சயமாக. அதெல்லாம் நம்முடையதே. அது சபையோருக்கு, விசுவாசிகளுக்கு, கிறிஸ்துவின் மணவாட்டிக்கு சொந்தமானது. அவர்கள் அதன் ஒவ்வொரு சிறு பாகத்தையும் சொந்தமாகப் பெற்றுள்ளனர். ரஷியா அதற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது, அமெரிக்கா அதற்காக சண்டையிட் டுக்கொண்டிருக்கிறது. இவர்கள் இதற்காக சண்டையிட் டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அங்கு சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர். இவை எல்லாவற்றிற்கும் பிறகு அவர்கள் நம்மை பயித்தியக்காரர்கள் என்றழைக்கின்றனர். நீங்கள் அமரிக்கையாக உட்கார்ந்து கொண்டிருங்கள். எப்படியானாலும் அது உங்களுக்கு சொந்தமானது. ஆமென். எப்படியானாலும் நாமெல்லாரும் அதற்கு சுதந்தரவாளிகளாகப் போகின்றோம். அவர்கள் சண்டையிட்டு, ஒருவரையொருவர் கொன்று கொண்டிருக்கட்டும். அது நமக்கு சொந்தமானது. அதை பெறுகிறவர்கள் நாமே. அவர்கள் அதை நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் நமக்கு அது எப்படியும் தெரியும். 40மெலிந்த எலும்பு காணும் ஆடுமாடுகளுடன் மலையின் மேல் இருந்த அந்த ஏழை மனிதன் இவையனைத்தும் சொந்தமாகக் கொண்டிருந்தான் என்று யார் நினைத்திருப்பார்கள்? பாலஸ்தீனா தேசம் முழுவதும் அவனுக்கு சொந்தமானதாயிருந்தது. ஆம், ஐயா. ஆகவே பலப்பரீட்சை நடக்க வேண்டிய இடத்தை அவன் அடைந்தபோது, தேவன் அவனோடே கூட இருந்தார் என்பதை நிரூபித்தார். அவன் ஒரு சில ஆட்களை கூட்டிக்கொண்டு அங்கு சென்று, அவர்கள் ஒவ்வொரு வரையும் முறியடித்து, தன் உடமையை திரும்பக் கொண்டு வந்தான். ஆமென். அது எனக்குப் பிரியம். ஏன்? அவன் தன் விசுவாசத்தை தேவனுடைய வாக்குத்தத்தம் என்னும் கல்லின் மேல் வைத்தான். அதுதான் அவசியம். அவன் வேறொரு அஸ்திபாரத்தைப் போடவில்லை. அவன் போய் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஒன்றையும் அவன் செய்யவில்லை. அவன் தன் விசுவாசத்தை அந்த வாக்குத்தத்தத்தின் மேல் வைத்தான்! ஆமென். அதுதான், அந்த வாக்குத்தத்தத்தின் மேல் அதை வைத்து, முன்னே சென்றான். துருப்பிடித்த பட்டயமோ, துருப்பிடிக்காத பட்டயமோ, அவனுக்கு எதுவானாலும் பரவாயில்லை. அவன் தன் விசுவாசத்தை அந்த வாக்குத்தத்தத்தின் மேல் வைத்திருந்தான். 41நீங்கள் ஜெபித்துக்கொள்ள முன்னால் வரும்போது, உங்களுக்கு இரட்சிப்பு தேவைப்பட்டால்,அல்லது தெய்வீக சுகமளித்தல் தேவைப்பட்டால், அது எதுவானாலும், நீ விசுவாசியானால், ஒவ்வொரு வாக்குத்தத்தத்துக்கும் நீ சுதந்தரவாளியாகிவிடுகிறாய். எனவே உன் விசுவாசத்தை அந்த வாக்குத்தத்தத்தின் மேல் வைத்து, முன்னே சென்று, சாத்தானிடம் அதை திரும்பக் கொடுத்துவிடு! அதை திரும்பக் கொடுத்து விடு! அது என்னுடையது'' என்று சொல். அவன் உங்களை ஒருவெற்று பயமுறுத்தலினால் ஏமாற்றும்படிக்கு விடாதீர்கள். அந்த வரிசையிலே நின்று கொண்டிரு. அவன் அதை திரும்ப கொடுத்துவிடுவான். அவன் திரும்பக் கொடுத்துவிடுவான் என்று தேவன் கூறியுள்ளார். ஆகவே அவன் அதை செய்தாக வேண்டும். அது உங்கள் அதிகாரம். அது உண்மை . சகலத்துக்கும் சுதந்தரவாளி! 42அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை என்னும் அஸ்திபாரத்தின் மேல் நிலை நின்றான்.அவன் ஒரு சுதந்தரவாளி, எனவே அவன் அதை அறிந்திருந்தான். சரி, ஐயா. அந்த வாக்குத்தத்தம் அவனுக்கு உறுதிபடுத்திக் கொடுக்கப்பட்ட பின்பு, வாக்குத்தத்தம் அளித்தவருடன் அவன் ஐக்கியங்கொண்டான். அது எனக்குப் பிரியம், வாக்குத்தத்தத்தை தேவன் செய்த பிறகு பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு பரீட்சை ஆபிரகாமுக்கு அதற்கு முன்பு நேரிடவில்லை. அவையெல்லாம் அவனுக்கு சொந்தம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதுதான் அவனுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தமாயிருந்தது. இருப்பினும், அவன் இதற்கு முன்பு ஒரு சேனையுடன் சண்டையிட வேண்டிய நிலை ஏற்படவில்லை. அவனுக்கு சண்டையைப்பற்றி ஒன்றுமே தெரியாது. சண்டையிட அவன் பயிற்சி பெற்றிருக்கவில்லை. அவன் சண்டையிடுபவன் அல்ல. அவன் ஆடு மேய்ப்பவன். அவன் இராணுவ வீரன் அல்லாத காரணத்தால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுடைய வேலையாட்களும் இராணுவ வீரர் அல்ல, அவர்களும் ஆடு மேய்ப்பவர்களே, எனவே அவனால் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று தேவனுடைய வாக்குத்தத்தத்தை எடுத்துக்கொண்டு, அதன் மேல் தன் விசுவாசத்தை வைத்து, அவர்கள் பின்னால் செல்வதே. தேவன் அதை அவனுக்கு உறுதிபடுத்திக் கொடுப்பதை ஆபிரகாம் கண்ட போது அவர் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை அறிந்து கொண்டான்... ஆமென்! அதுதான். 43நீங்கள் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்தால், அதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருந்தால், உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று அதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறினால், அதை பெற்றுக் கொள்ளும் வரைக்கும் அங்கேயே இருங்கள். அது நித்திய ஜீவன். அதற்கு நீங்கள் சுதந்தரவாளிகள். அங்கேயே நின்றுகொண்டு, சாத்தானின் முகத்தை நோக்கி, 'நீ ஒரு கொள்ளைக்காரன். எனக்காக இயேசு எதற்கு மரித்தாரோ, அதை சுதந்தரித்துக்கொள்ள நான் வந்திருக்கிறேன். அதை திரும்பக் கொடுத்துவிடு! என் வழியை விட்டு அகன்று போ'' என்று சொல்லுங்கள். அப்பொழுது முதலாவது நடப்பது என்ன தெரியுமா, பரிசுத்த ஆவி உங்கள் மேல் பொழியும். அப்பொழுது ஏதோ ஒன்று நடக்கிறது. அது என்ன? தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். அது முற்றிலும் உண்மை . நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்றும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்கள் என்றும் வார்த்தை உங்களுக்கு உறுதிப்படுத்திக் கொடுத்ததை நீங்கள் கண்டபிறகு என்ன நடக்கிறது? ஆபிரகாம் வெற்றியடைந்து, வெற்றி நடை போட்டு திரும்பி வருகிறான். அவன் இழந்து போனதை திரும்ப பெற்றுக்கொள்வான் என்னும் விசுவாசத்தை வார்த்தையின் மேல் வைத்தவனாய் அங்கு சென்றான், இதோ அவன் வெற்றி நடை போட்டு அதனுடன் திரும்பி வருகிறான்.நீங்களும் அதை செய்ய முடியும். நீங்கள் நித்திய ஜீவனைப் பெறாமலிருந்தால், தேவனைக் கேளுங்கள். உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, தேவனுடைய குமாரனை விசுவாசித்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று ஒன்றுண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, “தேவனே, அதற்காகவே நான் வருகிறேன். அதைப்பெற்றுக்கொள்ள இங்கு வந்திருக்கிறேன்'' என்று கூறுங்கள். அப்பொழுது நீங்களும் அதைபெற்றுக் கொண்டவர்களாய் வெற்றி நடையுடன் திரும்புவீர்கள். ஆமென். நீங்கள் பிரகாசிப்பீர்கள், என்னே! அப்பொழுது பறவைகளின் பாடல் உங்களுக்கு வித்தியாசமாயிருக்கும். நீங்கள் எல்லோரிடத்திலும் அன்புகூருவீர்கள். உங்கள் பழைய பகை, குரோதம், சச்சரவு எல்லாம் போய் விட்டிருக்கும். நீங்கள் எல்லோரையும் நேசிப்பீர்கள். ஓ, நீங்கள் பாடி, சத்தமிட்டு, தேவனைத் துதித்து,ஒரு மகத்தான தருணத்தை பெற்றிருப்பீர்கள். யார் உங்களைக் குறித்து என்ன கூறினாலும் நீங்கள் கவலை கொள்ளாமல், பரவாயில்லை என்பீர்கள். நிச்சயமாக, வெற்றி பெற்றவனின் நடை! 44அப்பொழுது ஆபிரகாமைச் சந்திக்க யார் வருகிறார்? அவனை சந்திக்க வருவது யார்? மெல்கிசேதேக்கு. அவருடைய வார்த்தை உறுதிப்படுத்தப்பட்ட பின்பு அவனை சந்திக்க மெல்கிசேதேக்கு வருகிறார். மெல்கிசேதேக்கு தான் அவனுக்கு அந்த வார்த்தையை அருளினார். ஆபிரகாம் அந்த வார்த்தையின்மேல் விசுவாசத்தை வைத்தவனாய் புறப்பட்டு சென்று, வெற்றி யடைந்து திரும்பி வந்து, மெல்கிசேதேக்குடன் ஐக்கியங் கொண்டான். ஆமென். நீங்களும் அப்படி செய்யலாம். ஓ, நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட பின்பு, அவருடைய வார்த்தை உங்களுக்கு புதிதான ஒன்றாக ஆகிவிடும். ஓ, என்னே ! ஓ, நீங்கள், இவைகளை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கூச்சலிடுதலில் எனக்கு நம்பிக்கையில்லை. அந்நிய பாஷைகள் பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. தெய்வீக சுகமளித்தலில் எனக்கு நம்பிக்கையில்லை'' எனலாம், அப்படியானால் நீங்கள் வெற்றியடையவில்லை என்பதை அது காண்பிக்கிறது. அது உண்மை. ஆனால் ஒரு முறை நீங்கள் வெற்றியடைந்தால், நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள். ஆம், ஐயா. அப்பொழுது நீங்கள் கூச்சலிடுவீர்கள். நான் ... 45முன்பெல்லாம் ஆவியில் நடனமாடுவதைக் குறித்து ஒரு நல்ல கருத்தை நான் கொண்டிருந்தேன் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள், யாராகிலும் ஒருவர் ஆவியில் நடனமாடுவார். ஆனால் இப்பொழுதோ அதை கேலிக் கூத்தாக செய்து விட்டார்கள். ஆனால் உண்மையில் ஆவியில் நடனமாடுவதை நான் கண்டிருக்கிறேன். ஜனங்கள் ஆவியில் ஏன் நடனமாடுகின்றனர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் முறை தவறி நடப்பதையோ, நடத்தை கெட்ட விதத்தில் நடந்து கொண்டதையோ நான் ஒருபோதும் கண்டதில்லை. அவர்கள் எப்பொழுதும் நாணயமாகவும் ஒழுங்காகவும், இனிமையாகவும் நடந்துகொண்டனர். அப்படி அவர்கள் நடனமாடிக்கொண்டிருக்கும் அந்நேரத்தில் பாவிகள் பீடத்தண்டை ஓடிச் சென்று இரட்சிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஏன் அப்படி நடனமாடுகின்றனர் என்று நான் வியந்ததுண்டு. பிறகு அது வெற்றியின் சின்னம் என்பதை நான் கண்டு கொண்டேன். உடன்படிக்கை பெட்டி அதன் இளைப்பாறும் ஸ்தலத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, தாவீது கர்த்தருக்கு முன்பாக நடனமாடினான். ஆமென். வார்த்தையானது - அது அப்பொழுது கற்பலகைகளில் எழுதப்பட்டிருந்தது- அதன் சரியான இடத்துக்கு கொண்டு வரப்பட்டதை தாவீது கண்டபோது, அவன் களிகூர்ந்து ஆவியில் சுற்றி சுற்றி சுற்றி நடனமாடினான். ஏன்? வார்த்தை அதன் இடத்தில் திரும்ப வந்துவிட்டதை அவன் கண்டான். ஆமென். இன்று வார்த்தைக்கு தேவையானது, வேத பள்ளியிலிருந்து வெளிவந்து வேத சாஸ்திரத்தினால் குழம்பியுள்ள போதகர் அல்ல; ஆனால் பிரசங்க பீடத்தின் பின்னால் நின்று கொண்டிருக்கும் பழமை நாகரீகம் கொண்ட, தேவனால் அனுப்பப்பட்ட போதகர் வார்த்தையைக் கொண்டவராய், தேவன் அதை உறுதிப்படுத்தி நிரூபிப்பதே. 46தாவீது, “தேவனுக்கு மகிமை! அதுதான் வேண்டும்'', என்று சொல்லி, சுற்றி சுற்றி சுற்றி நடனமாடினான். ராஜாவின் மகளானதால் கர்வம் கொண்டிருந்த அவன் மனைவி ”அவர் என்னை வெட்கப்படுத்துகிறார்'', என்றாள். தாவீது, 'இது உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் இதை கவனி!'' என்று சொல்லி மறுபடியும் சுற்றி சுற்றி நடனமாடினான். ஆம்! ஓ, என்னே, அவன் எப்படிப்பட்ட ஒரு தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்! உங்களுக்குத் தெரியுமா, தேவன் பரலோகத்திலிருந்து கீழே நோக்கி, “தாவீதே, நீ இருதயத்துக்கு ஏற்றவன்'' என்றார். பாருங்கள்? பாருங்கள்? ஏன்? அவன் தன் பெருமையை இழந்தான். தனக்கிருந்த எல்லாவற்றையும் இழந்தான். அவன் ராஜாவின் குமாரத்தியை விவாகம் செய்திருந்தான், ஆனால் அவன் அதை பொருட்படுத்தவேயில்லை, அவன் வானத்தையும் பூமியையும் உடையவரிடம் தொடர்பு கொண்டிருந்ததை அறிந்திருந்தான். இதோ தேவனுடைய வார்த்தை அதற்குரிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தது. தாவீது மகிழ்ச்சி மேலிட்டு, அவனால் முடிந்தவரை நடனமாடினான். மிரியாம் சிவந்த சமுத்திரத்தைக் கடந்த பிறகு, மறுகரையில் கஞ்சிராவைக் கையிலெடுத்து நடனமாடினாள். அவள் சத்துருக்கள் சமுத்திரத்தில் அமிழ்ந்து போனதைக் கண்ட போது, அவள் நடனமாடினாள். அவளைத் துன்பப்படுத்தின சத்துருக்கள் மரித்து போனதைக் கண்டபோது, அவள் நடனமாடினாள். அது உண்மை . அதன் பிறகு தான் போரில் வெற்றி கண்ட பிறகு, தேவனுடைய மகிமை இறங்கி வருகிறது. 47மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்ததாக நாம் காண்கிறோம். வாக்குத்தத்தம் நிறைவேறி உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, அவன் ஐக்கியம் கொண்டான். ஆபிரகாமை ஆசீர்வதிக்க மெல்கிசேதேக்கு புறப்பட்டு வந்து, “ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்படுவானாக! வானத்தையும் பூமியையும் உடையவராயிருக்கிற ஆபிரகாமின் தேவனுக்கு ஸ்தோத்திரம்', என்றார். ஓ, என்னே, அது எனக்கு எவ்வளவு பிரியம். விசுவாசிக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம்!'' அதற்கும் நமக்கும் சம்பந்தம் என்ன?' என்று நீங்கள் கேட்கலாம். அது ஒவ்வொரு விசுவாசிக்கும் அளிக்கப்பட்டுள்ளது விசுவாசிக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் நித்திய ஜீவன். விசுவாசிக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் ஜீவன், சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம் என்னும் ஆவியின் கனிகள், தெய்வீக சுகம் பெறுதல் போன்றவை. இப்படிப்பட்ட ஒரு டஜன் காரியங்களை இங்கு எழுதி வைத்துள்ளேன். இவையெல்லாம் உங்களுடைய உடமை. இது உங்களுக்குச் சொந்தம். ஆனால் அதற்காக நீங்கள் போரா டாமல் அதை பெற்றுக்கொள்ள முடியாது. காணக்கூடிய எல்லாமே, காணக்கூடிய உலகப் பிரகாரமான அனைத்துமே எனக்குத் சொந்தமானவை, தேவன் அதை கிறிஸ்துவின் மூலம் எனக்குத் தந்தருளியிருக்கிறார். காணக் கூடாதவைகளும் எனக்குச் சொந்தமானவை. ஆமென் அது எனக்குப் பிரியம். நாம் காணக்கூடிய தெய்வீக சுகம் பெறுதல் போன்றவை நல்லதுதான். அதை நாம் பாராட்டுகிறோம்; ஆனால் காணக்கூடாதவை! 48விஞ்ஞானம் ஆராயமுற்பட்டு, நல்லது, இந்த மனிதன் சுகமடைந்துவிட்டான் என்று கூறுகிறீர்கள். இவனை நான் கொண்டுசென்று பரிசோதனை செய்து பார்க்கட்டும். அவனுக்கு என்ன நேர்ந்ததென்று பார்க்கட்டும். உனக்கு இங்கு முன்பு சதை வளர்ந்திருந்ததாக கூறுகிறாய் அல்லவா?'' என்கிறது. ''ஆம், இங்குதான்'' ''நல்லது, நான் விஞ்ஞான ஆராய்ச்சி செய்து, அது மறைந்துவிடாமல் உள்ளே பதிந்து விட்டதா என்று காணட்டும். நீ ஒரு காலத்தில் குருடனாயிருந்தாய், இப்பொழுது காண்கிறாய் என்று கூறுகின்றாய். நான் எப்படி நம்புவது? அதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி செய்து பார்க்கட்டும்.'' அவர்கள் வேண்டுமானால் ஆராய்ந்து பார்க்கட்டும். ஆனால் நான் சரீரப்பிரகாரமான அனைத்துக்கும் கூட சுதந்தரவாளியாயிருக்கிறேன். அது மாத்திரமல்ல, விஞ்ஞானம் ஆராய முடியாத காணக்கூடாத வைகளுக்கும் நான் சுதந்தரவாளியாயிருக்கிறேன். ஆமென். ஆமென் காணக்கூடாதவைகள், ஆமென், அதற்கும் நான் சுதந்தரவாளி. இந்த பூமிக்கு நான் சுதந்தரவாளி, நீங்கள் சுதந்தரவாளி. ஒவ்வொரு விசுவாசியும் அதற்கு சுதந்தரவாளி. சரி, அப்படியானால் காணக்கூடாதவைகள்! அவர் எதை உடையவராயிருக்கிறார்? வானத்தையும் பூமியையும். ஆமென். எல்லாமே ! அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, நாம் காணக்கூடாத அங்கிருப்பவைகளை குறித்தென்ன? உங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்கலாம். அதுவும் என்னுடையதே ஆமென். பரலோகம் எனக்குச் சொந்தமானது. அது என்னுடையது. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அது உண்மை. ''நீங்கள் தான் அதை கண்டதில்லையே, அது அங்குள்ளதென்று உங்களுக்கு எப்படிதெரியும்?'', நான் காணாவிட்டாலும் அது அங்குள்ளதென்று எனக்குத் தெரியும். அங்குள்ளதாக தேவன் கூறியுள்ளார். ''அதை நீங்கள் கண்டதில்லையே, அப்படியிருக்க அதற்கு நீங்கள் சுதந்தரவாளியென்று உங்களுக்கு எப்படி தெரியும்?'' அவருடைய வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன். ஆமென். நான் சுதந்தரவாளி, நீங்களும் சுதந்தரவாளிகள். நாமெல்லாருமே கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சுதந்தரவாளிகளாகி விட்டோம். 49கொரிந்தியர் இரண்டாம் நிருபத்தில் பவுல் என்ன கூறியுள்ளான் என்பதை கவனித்தீர்களா? நாம் மரணத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவன் கூறியுள்ளான். அதை சிந்தித்துப் பாருங்கள். மரணத்தை சொந்தமாக்கிக்கொள்வதா? ஆம் ஐயா. அது நம் மேல் அக்கறை கொண்டுள்ளது. ஆமென். நல்லது. மகிமை! துப்பாக்கி வெடித்ததைக் குறித்து இப்பொழுது நான் மறந்தே போய்விட்டேன். பாருங்கள். அவன் ஏன் என்னைக் கொல்லவில்லை? அவனால் கொல்ல முடியாத காரணத்தால்,அதனால் தான் அவன் என்னைக் கொல்லவில்லை. தேவன் அப்பொழுது ஆயத்தமாயிருக்கவில்லை. அவன் விருப்பப்படி அவன் வரக்கூடும். ஆனால் அவன் உங்கள் உயிரை எடுத்துக் கொள்ள முடியாது. ஆமென். மகிமை! நீண்ட நாட்களுக்கு முன்பே, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரான இயேசு கிறிஸ்துவை நான் விசுவாசித்தபோது, என் கடனை நான் செலுத்தி தீர்த்து விட்டேன். இப்பொழுது மரணம் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆமென். “மரணம் நமக்கு சொந்தமா?'' என்று நீங்கள் கேட்கலாம். அப்படித்தான் பவுல் இங்கு கொரிந்தியர் நிரூபத்தில் கூறியுள்ளான். மரணத்தையும் நாம் சொந்தமாகக் கொண்டிருக்கிறோம். ஏன்? பவுலின் தலையை வெட்ட அவர்கள் ஆயத்தமான போது அவன்,“மரணமே, உன் கூர் எங்கே? உன் கூர் எங்கே? உன்னால் என்னை பயப்படுத்த முடியாது'',என்று கூறினான். ''உன்னை நசுக்கி, கல்லறையில் அடக்கம் பண்ணுவேன். அங்கு நீ அரிக்கப்பட்டு அழுகிப் போவாய்'', என்று மரணம் அவனிடம் கூறினது. அவனோ, ''நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வினாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்', என்றான். ஆம், ஐயா. மரணம், நரகம், பாதாளம் இவையனைத்தும் எனக்குச் சொந்தம். ஏனெனில் அவர் நமக்காக இவைகளின் மேல் வெற்றி சிறந்திருக்கிறார். சகலத்தையும் உடையவர் 50ஜனங்களுக்கு வாக்குத்தத்தத்தின் மூலம் அளிக்கப்பட்ட அவர்கள் கண்டிராத தேசத்திலிருந்து யோசுவாவும் காலேபும் ஒரு அடையாளத்தைக் கொண்டு வந்தது போல். அப்படிப்பட்ட ஒரு தேசம் உண்டு என்பதற்கு யோசுவாவும் காலேபும் ஒரு அத்தாட்சியைக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு அங்கே அதற்கான வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. தேவன் அவர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தார்.அவர்கள் அந்த தேசத்தின் எல்லைவரைக்கும் வந்தனர். அவர்கள் அந்த தேசத்தைக் கண்டதில்லை. யோசுவாவும் காலேபும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்று, அங்கு தேசம் உள்ளதென்றும் அது நல்ல இடமென்றும், அது பாலும் தேனும் ஓடுகிற தேசமென்னும் அத்தாட்சியை கொண்டு வந்தனர். ஆமென் அது என்ன? அவர்கள் அந்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளப்போய்க் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அந்த வாக்குத்தத்தம் இருந்தது. அவர்கள் அந்த வழியில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் யோர்தானை ஏறக்குறைய அடைந்து விட்டனர், யோசுவா அதைக் கடந்து அங்கு சென்று, அது செழிப்பான தேசமென்னும் அத்தாட்சியை அங்கிருந்து கொண்டு வந்தான். 51யோசுவா இஸ்ரவேல் புத்திரருக்கு என்ன செய்தானோ (யோசுவா என்றால் “இரட்சகர்'' என்று பொருள் - யோசுவா என்னும் சொல்) அதையே இயேசு, அவர்கள் அவரைக் கொன்றபோது, சபைக்குச் செய்தார். அவர் மரணத்தை ஜெயித்தார். நரகத்தை ஜெயித்தார், பாதாளத்தை ஜெயித்தார். அவர் உயிரோடெழுந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் அத்தாட்சியை உடையவராய் நதிக்கு அப்பால் ஒரு தேசம் உண்டென்றும், அது என்றென்றைக்கும் இனிமையானது என்றும் காண்பித்தார். ஆமென். அவர் திரும்ப வந்து நமக்கு ஒரு அத்தாட்சியை அளித்தார். சகோ. பிரன்ஹாமே, அது என்ன செய்யும்? நீ பொய் சொல்வதையும், திருடுவதையும், குடிப்பதையும், சபிப்பதையும் ,உன் நடத்தை கெட்ட செயலையும் மற்றெல்லாவற்றையும் அது நிறுத்தி விடும். அது உன்னை ஒரு புது சிருஷ்டியாக செய்துவிடும். நான் ஒரு காலத்தில் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவனாயிருந்தேன். இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறேன், ஆமென். வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளியாயிருக்கிறேன். அல்லேலூயா! ஆம், ஐயா, அந்த தேசம் நமக்குச் சொந்தமானது. உனக்கு எப்படித்தெரியும்? நமது யோசுவா மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, பரிசுத்த ஆவி என்னும் அத்தாட்சியைக் கொண்டு வந்தார். அதை நான் பெற்றிருக்கிறேன். ஆமென். வ்யூ மகிமை. நான் ஒரு சுதந்தரவாளி. ஓ, ராஜாவின் புத்திரன். சகலத்துக்கும் சுதந்தரவாளி. வேதம் அவ்வாறு கூறுகின்றது. அதே தேவன் - இஸ்ரவேலருக்கு ஒரு தேசத்தை வாக்குத்தத்தம்பண்ணின அதே தேவன் (அவர்கள் அந்த தேசத்தை காணவில்லை ); அதே வேதாகமம், அதே தேவன் நமக்கு நித்திய ஜீவனை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். பரிசுத்த ஆவி அதற்கு சாட்சியாய் இருக்கிறார். கிறிஸ்து உயிரோடிருக்கிறார்.அவர் மரித்தவராய் இல்லை. அவர் நமது மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கி றார். நமது மூலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாம் சூழப்பட்டிருக்கிறோம். ஆமென். 52அன்றொரு நாள் சாத்தான் என்னைக் கொல்ல தருணம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் பெஞ்சின் (bench) மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவனால் அதை செய்ய முடிய வில்லை. ஆமென். அது ஆயத்தமாயுள்ளது என்று கிறிஸ்து கூறும் வரைக்கும் அவனால் அதை செய்யமுடியாது. ஆமென், அவன் எத்தனை முறை வந்தாலும், கிறிஸ்து அவனுக்கு கட்டளை கொடுக்கும் வரைக்கும் அவன் வெறுங்கையனாய் திரும்பிப் போக வேண்டும். ஆமென். அது உண்மை . தேவன் அதை வாக்களித்துள்ளார். தேவனுடைய வார்த்தையே அதை வாக்களித்துள்ளது. நாம் சுதந்தரவாளிகளாயிருப்பதால், அதை விசுவாசிக்கிறோம். நான் தெய்வீக சுகம் பெறுதலுக்கு சுதந்தரவாளியாயிருக் கிறேன். நான் சந்தோஷத்துக்கு சுதந்தரவாளி யாயிருக்கிறேன். நான் சந்தோஷமாயிருக்க எனக்குரிமை உண்டு. ''உனக்கு எப்படித் தெரியும்?'' ஏனெனில் அதற்கு நான் சுதந்தரவாளியாயிருக்கிறேன். ஆமென் நான் பக்தி பரவசப்படுகிறேன். கவனியுங்கள். நான் சந்தோஷத்துக்கு சுதந்தரவாளியாயிருக்கிறேன். நான் சமாதானத்துக்கு சுதந்தரவாளியாயிருக்கிறேன். நான் பரிசுத்த ஆவிக்கு சுதந்தரவாளியாயிருக்கிறேன். ஆமென். அது பெற்றுள்ள ஒவ்வொரு அத்தாட்சிக்கும் நான் சுதந்தரவாளியாயிருக்கிறேன், ஆமென், தேவன் பெற்றுள்ள அதிகாரத்துக்கு நான் சுதந்தரவாளி யாயிருக்கிறேன், ஆமென். ''உனக்கு அதை அளித்தது யார்?'' நானல்ல, அவர் அளித்தார். நீங்கள் ஒவ்வொருவரும் அதற்கு சுதந்தரவாளியாயிருக் கிறீர்கள். 53சிங்காசனத்துக்கு சுதந்தரவாளி! ''நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்தில் அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங் கொள்கிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படி அருள் செய்வேன்'' ஆமென், சகலத்துக்கும் சுதந்தரவாளி ஒன்றுக்கு மாத்திரமல்ல, சகலத்துக்கும் எல்லாமே உங்கள் கால்களின் கீழ் உள்ளன. மரணமும் கூட உங்கள் கால்களின் கீழ், எல்லாமே உங்கள் கால்களின் கீழ் உள்ளன. நீங்கள் சுதந்தரவாளி, நீங்கள் மரித்தீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நீங்கள் நித்திய ஜீவனுக்கு உயிரோடெழுப்பப்பட்டு, கிறிஸ்து இயேசுவோடு கூட உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறீர்கள். ஓ, என்னே! வ்யூ! நீங்கள் எந்த பெயரினாலும் எங்களை அழையுங்கள். உங்களுக்கு விருப்பமானால் எங்களைப் பயித்தியக்காரர் என்று அழையுங்கள். ஆனால் நாங்களோ சுதந்தரவாளிகள். எதற்கு சுதந்தரவாளிகள்? சகலத்துக்கும். ''நீங்கள் பிரன்ஹாம் கூடாரத்துக்கு சுதந்தரவாளிகளா?'' இல்லை, நான் சகலத்துக்கும் சுதந்தரவாளி. காணக்கூடி யவைகள், இப்பொழுது உள்ளவைகள், வருங்காலத்தில் இருக்கப்போகிறவைகள் இவையனைத்துக்கும் நான் சுதந்தரவாளி. 54இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் எல்லா பாவமும் பொல்லாப்பும் என் கால்களின் கீழ் உள்ளது. அவர் ஈஸ்டர் காலையில் உயிரோடெழுந்து மரணம், நரகம், பாதாளம் ஆகியவைகளின் மேல் வெற்றி சிறந்து என்னை சுதந்தரவாளியாக்கி, அங்கு காத்திரு. நான் வாக்குத்தத்தத்தைக் கொடுப்பேன்'' என்றார். அதிகாரம் பெற்ற அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியக்காரன், ''வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். நான் ஒரு சுதந்தரவாளி. ஆமென். ஆமென். இயேசு அதை நமக்கு அவருடைய உயிர்த்தெழுதலின் போது நிரூபித்து விட்டார். ஓ, என்னே! நாம் மரணத்துக்கும் ஜீவனுக்குமிடையே நடக்கும் போர்க்களத்தில் பிரவேசித்திருக்கிறோம்.“சகோ. பிரன்ஹாமே, நான் ஒரு பாவி . '' நீ அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. நீ பாவியாயிருக்க விரும்புவதன் காரணத்தால் பாவியாயிருக்கிறாய். நீ பாவியாயிருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கான கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. “சகோ. பிரன்ஹாமே, எனக்கு சந்தோஷம் கிடைக்கப் பெற்றால் நலமாயிருக்கும்.'' அதை நீ பெற்றுக் கொள்ளலாம். நீ எந்த ஆசீர்வாதங்களைப் பெற வேண்டுமென்று கிறிஸ்து மரித்தாரோ, அவையனைத்தையும் சாத்தான் உன்னிலிருந்து எடுத்துப் போட அவனுக்கு இடங்கொடுக்கிறாய். அதற்கெல்லாம் நான் சுதந்தரவாளி, அது என்னுடையது. அவர் எதற்காக மரித்தாரோ, அவை எனக்கு சொந்தம் ,உங்களுக்கு சொந்தம். நாம் அவருடைய பிள்ளைகள், அதற்கு சுதந்தரவாளிகள் - அவர் மரித்த அனைத்துக்கும். 55நீங்கள் அந்த போர்க்களத்தில் பிரவேசிக்கும்போது, ''ஆ, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று ஒன்றில்லை. உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் கோமாளித்தனமாக நடந்து கொள்வீர்கள், ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கப்போகின்றது'' என்கிறீர்கள். அது வித்தியாசமாக இருந்தால் எனக்குக் கவலையில்லை. அதற்கு நான் சுதந்தரவாளி. அது ஜீவன், அதற்கு பின்னே நான் செல்கிறேன். அது உண்மை . அதுவே ஒவ்வொரு பாவியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.... ''பரிசுத்த ஆவியானவர் இங்கு நின்று கொண்டு, நான் வந்து அதை பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் கூறுகிறார். அதன் அடிப்படையில் நான் வந்து பெற்றுக் கொள்கிறேன். அது என்னுடையது. அதைப் பெற்றுக்கொள்ளும் வரைக்கும் நான் எழுந்து போகமாட்டேன். நான் மூட மனிதாபிமானியாய் இருக்க மாட்டேன். நான் இங்கேயே தங்கியிருப்பேன்.என்ன நடந்து கொண்டிருந்தாலும் எனக்கு கவலையில்லை. கர்த்தாவே, எனக்கு நீர் பரிசுத்தஆவியை அருளும் வரைக்கும் நான் ஜெபிப்பதை நிறுத்த மாட்டேன். அதை நீர் இப்பொழுதே செய்வீர் என்று அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் தவறு ஏதாகிலும் இருந்தால், அதை இப்பொழுதே எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். அதை நான் சரி செய்து விடுகிறேன். அது என்ன கர்த்தாவே,அதை நான் சரி செய்து கொள்கிறேன்'' தேவன் தவறு ஒன்றையும் வெளிப்படுத்தாமல் போனால், ''அப்படியானால் சாத்தானே, அதற்காக நான் வந்திருக்கிறேன், இனிமேல் நீ என் குறுக்கே நிற்க முடியாது. என் வழியை விட்டு விலகு'' என்று சொல்லுங்கள். 56பார்த்தீர்களா, சகலத்துக்கும் சுதந்தரவாளி, நித்திய ஜீவனுக்கு சுதந்தரவாளி, தெய்வீக சுகம் பெறுதலுக்கு சுதந்தரவாளி. ஓ! ''இரட்சிப்புக்கு சுதந்தரவாளி. தேவனால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டு அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவன். இதுவே என் வரலாறு, இதுவே என் பாடல். நாள் முழுவதும் என் இரட்சகரை ஸ்தோத்தரிப்பேன்; பரிபூரண சமர்ப்பித்தல், எல்லாம் முடிவுற்றது. நான் என் இரட்சகரில் சந்தோஷமும் ஆசீர்வாதமும் கொண்டிருக் கிறேன்; அவருடைய அருமைத் தன்மையால் நிரப்பப்பட்டு அவருடைய அன்பில் ஆழ்ந்துவிட்டேன் (அல்லேலூயா. புரிகின்றதா ) இதுவே என் வரலாறு. இதுவே என் பாடல் நான் இரட்சிப்புக்கு சுதந்தரவாளி. இரட்சிப்பு என்பது என்ன? அது எனக்கு அருளப்பட்ட ஒன்று. அது ஒரு ஈவு. நான் இரட்சிப்புக்கு சுதந்தரவாளி. எந்த வகை? நித்திய ஜீவன், என் ஆத்துமாவுக்கு இரட்சிப்பு, என் சரீரத்துக்கு இரட்சிப்பு, என் சோர்வுக்கு இரட்சிப்பு, எல்லாவற்றிற்கும் இரட்சிப்பு.தேவன் கிறிஸ்துவின் மூலம் என்னை சுதந்தரவாளி யாக்கியிருக்கிறார். அவர் மரித்து, உயிர்த்து, மறுபடியும் வந்து, அத்தாட்சியைக் கொண்டு வந்து, அதை நம்மேல் ஊற்றினார். ஓ, என்னே! மகிமை ! ஓ, என்னே !. 57நீங்கள் அங்கு செல்லும்போது என்ன செய்கிறீர்கள். நீங்கள் ஆபிரகாமைப் போல் அங்கு செல்லும்போது,அந்த வாக்குத்தத்தத்துடன் செல்லுங்கள். ''தேவனே, அது என்னுடையது என்று நீர் என்னிடம் கூறினீர். உமது வாக்குத்தத்தத்தின் பேரில் எனக்கு விசுவாசம் உண்டு. உமது வார்த்தையை நான் கொண்டு வருகிறேன். இதை நீர் வாக்களித்திருக்கிறீர். நீர், 'கேளுங்கள் அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் என்று கூறியிருக்கிறீர். கர்த்தாவே, இதோ நான் இங்கிருக்கிறேன். நான் தட்டிக்கொண்டிருக்கிறேன், தேடிக் கொண்டிருக்கிறேன், கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகவே அதை நான் பெற்றே ஆக வேண்டும்'' பார்த்தீர்களா, நீங்கள் வார்த்தையை அடிப்படையாகக் கொள்ளும் போது, ஏதோ ஒன்று நடக்கிறது. இயேசு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, “இப்படியும் எழுதியிருக்கிறதே'' என்று உரைத்த போது, சாத்தான் என்ன செய்தான் என்று கவனியுங்கள். நான் அன்றிரவு கூறினது போல், அவன் கம்பியின் மேலிருந்து கீழே குதித்து ஓடிவிட்டான். ஆம், ஐயா . நீங்கள் ஜெயங்கொண்ட பிறகு என்ன? நீங்கள் எப்படி ஜெயங் கொள்கிறீர்கள்? அதை நீங்களாகவே செய்திருக்க முடியுமா? இல்லை, ஐயா. யாரோ ஒருவர் உங்களுக்கு முன்னால் சென்று உங்களுக்காக ஜெயங்கொண்டார். அவர் கிறிஸ்து. அதற்கு நான் சுதந்தரவாளி. நான் ஒன்றையும் செய்ய வேண்டியதில்லை. நான் வாக்குத்தத்தத்துக்கு சுதந்தரவாளி. நான் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் விசுவாசம் வைப்பதே. உங்களுக்குப் புரிகிறதா? 58“சகோ. பிரன்ஹாமே, அதற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களா?'' இல்லை. ''நான் தகுதியுள்ளவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' இல்லை. ''பேராயர் அதற்கு தகுதியுள்ளவர் என்று நினைக்கிறீர்களா? இல்லை. எந்த மனிதனும் அதற்கு தகுதியா?'' இல்லை. ''அப்படியானால்?'' நான் அதற்கு சுதந்தரவாளி. நீ உலகத்திலேயே மிகப்பெரிய குடிகாரனாய் இருந்து, உன் தகப்பனார் உனக்கு கோடிக்கணக்கான டாலர்களை வைத்து சென்றிருந்தால், நீ அதற்கு தகுதியோ இல்லையோ, அதற்கு நீ சுதந்தரவாளியாகி விடுகிறாய். உன் தகப்பனுடைய சொத்துக்கு நீ சுதந்தரவாளி. அவர் எதை விட்டு சென்றிருந்தாலும், அதற்கு நீ தகுதியாயிருந்தாலும் இல்லாமற்போனாலும், அதை உனக்கே விட்டுச்சென்றிருக்கிறார். ஆமென். நான் பாவியாயிருந்தேன், ஆனால் சுதந்தரவாளி. நான் நல்லவனாயிருக்கவில்லை, இப்பொழுதும் அப்படியே. இருப்பினும் நான் சுதந்தரவாளி. நான் மரித்து நரகத்துக்குச் சென்றிருக்க வேண்டும், ஆனால் இப்பொழுது நான் சுதந்தரவாளி . எதற்கு சுதந்தரவாளி? நித்திய ஜீவனுக்கு. அதை பெறப்போகிறாய் என்று உனக்கு எப்படி தெரியும்?'' அதை உணருகிறேன். பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வந்தார். அது வருவதற்காக இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். அது இப்பொழுது வந்துவிட்டது. அது என்ன செய்யுமென்று கூறினதோ, அதை அப்படியே செய்து நிறைவேற்றி உறுதிபடுத்தினது என்பதற்கு அது சாட்சியாயுள்ளது. நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டேன். நான் கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாகிவிட்டேன். அப்படியானால் நான் ஒரு சுதந்தரவாளி. ஆம், ஐயா. இப்பொழுது நான் அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறேன். ஆமென், நான் செய்த இந்த நீசத்தனமான காரியங்கள் எல்லாம் என்ன? மிரியாம் செய்தது போல். திரும்பிப் பார்த்தால், அவை செத்து மறதி என்னும் கடலில் அடக்கம் செய்யப்பட்டு விட்டு பரலோகத்திலுள்ள தேவனுடைய மகத்தான புத்தகத்தில் என் பெயர் எழுதப்பட்டுள்ளது. அது எழுதப்பட்டு விட்டது. என் பெயர் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு முத்திரிக்கப்பட்டு மறதி என்னும் கடலில் போடப்பட்டு, மகிமையில் ஒரு புது புத்தகத்தில் என் பெயர் புதிதாக எழுதப்பட்டுவிட்டது. அது என்னுடையது. ஆம். அப்படியானால் நாம் சகலத்துக்கும் சுதந்தரவாளிகளாயிருக்கிறோம். 59ஆபிரகாமிடம் தேவன் என்ன கூறினார்? ''இந்த தேசம் உனக்குச் சொந்தமானது. அதிலுள்ள எல்லாமே உன்னுடையது. நீ கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளைப்பார். அவையெல்லாம் உன்னுடையதே, அங்குள்ள எல்லாமே, நீ உன் தேசத்தைவிட்டு புறப்பட்டு அந்நிய தேசத்தில் சஞ்சரிக்க வேண்டும். அந்த தேசத்துக்கு உன்னை சுதந்தரவாளியாக்கப் போகின்றேன். அதை உனக்கும் உன் பின்வரும் சந்ததிக்கும் என்றென்றைக்கும் தருவேன்'' என்றார். ஆபிரகாம் செய்ய வேண்டிய ஒரே காரியம், அந்த வாக்குத்தத்தத்தின் மேல் தன் விசுவாசத்தை வைத்து, பட்டயத்தை எடுத்துக் கொண்டு புறப்பட வேண்டியதே. கடினமான தருணம் வந்தபோது அவன் அங்கு சென்றான். தேவன் அவனுக்காக யுத்தம் செய்தார். அந்த யுத்தத்தில் அவன் ராஜாக்களை முறியடித்தான். இதோ அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஆமென், எல்லாமே அப்பொழுது முடிந்துவிட்டது. சகோதரனே, அவனால் கூச்சலிட முடிந்தது. வாலிபர் அனைவரும் ஆர்ப்பரித்து தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். ஆபிரகாம் திரும்பி வந்து கொண்டிருக்கிறான். அவனைச் சந்தித்தது யார்? சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு. அவர்கள் என்ன செய்தனரென்று பாருங்கள். யுத்தம் முடிந்தவுடன், அதில் வெற்றி பெற்ற பிறகு, அவர்கள் உட்கார்ந்து கொண்டு, திருவிருந்தில் ஒன்றாக பங்கு கொண்டு, ஒருவரோடொருவர் உரையாடினர். ஓ, அதைத் தான் தேவன் தம் பிள்ளைகள் இன்றிரவு செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். 60“சகோ. பிரன்ஹாமே, உங்களைக் குறித்தென்ன? நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் உங்கள் சபையைக் குறித்தென்ன?'' நாங்கள் ஆபிரகாமின் சந்ததியார், அவர்கள் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியார். நாம் கிறிஸ்து இயேசுவின் மூலம் ஆபிரகாமின் சந்ததியாராகி வாக்குத்தத்தத்தின்படி அவனுடன் சுதந்தரராய் இருக்கிறோம். ஆபிரகாம் சுதந்தரவாளியானால், நானும் சுதந்தரவாளியே, நான் ஆபிரகாமுடன் சுதந்தரவாளியாயிருக்கிறேன், நீங்களும் அப்படியே. அது எப்படி வந்தது?அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்து இயேசு என்னும் ராஜரீக சந்ததியின் மூலம் விசுவாசத்தினால் வந்தது. ஆபிரகாம் தன் குமாரனை மரித்தோரிலிருந்து பாவனையாகப் பெற்றுக் கொண்டான். நாம் குமாரர் அல்லாதிருந்தபோது, ஒரு குமாரனை பெற்றுக் கொண்டோம். அங்கு அடைய நமக்கு வழியே இருக்கவில்லை. தேவன் தமது குமாரனை தோன்றப்பண்ணி நம்மிடம் அனுப்பினார். அவர் வந்து நமது பாவங்களுக்காக தண்டனை அனுபவித்தார். அவருடைய மரணத்தின் மூலம் நான் சுதந்தரனானேன். ஓ, என்னே பார்த்தீர்களா? பிசாசின் பொல்லாங்கு அனைத்தும் பின்னால் தள்ளப்பட்டு விட்டது. தேவனுக்கு ஸ்தோத்திரம்! 61ஜெயங்கொண்டோம்! உங்களில் எத்தனை பேர் இன்றிரவு ஜெயங்கொண்டவர்களாயிருக்கின்றீர்கள்? உங்கள் கரத்தை நான் காணட்டும். “தேவனுடைய கிருபையினால் நான் ஜெயங் கொண்டிருக்கிறேன். தேவனுக்கு ஸ்தோத்திரம். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன் தெரியுமா? இங்கிருந்து தொடங்கி உங்களைப் பாதி இரவு வைத்திருக்க விரும்புகிறேன். நாமெல்லாரும் ஒரு நல்ல பிரதிஷ்டை ஆராதனையில் பங்கு கொள்வோம். நமது வாழ்க்கையை அவருக்க அர்ப்பணித்து, நமது பிரதிஷ்டையை புதுப்பித்துக் கொள்வோம். அப்படி செய்ய வேண்டுமென்று எத்தனை பேருக்கு தோன்றுகிறது? என் இரு கரங்களையும் நான் உயர்த்தியிருக்கிறேன் - என் இருதயத்தையும்கூட, என் வாழ்க்கை கிறிஸ்துவுக்காக பேச வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கிறிஸ்துவுக்கு என் பிரதிஷ்டையை புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறேன். அவருடைய சித்தம் என் ஜீவியத்தில் செய்யப்படவேண்டும், என் சித்தம் பின்னால் தள்ளப்பட வேண்டும். அவருடைய சித்தம் மாத்திரமே செய்யப்படவேண்டும். நான் ஜெயங்கொண்டவனின் நடைபோட விரும்புகிறேன். அது நான் என்பதனால் அல்ல. அவர் பிரசங்கித்த சுவிசேஷம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபன கோட்பாடுகளினாலும் மற்றவைகளிலும் அவதியுறுவதை நான் அறிவேன். நாம் பெற்றிருக்க வேண்டிய மகத்தான வெற்றி சத்துருவினால் தடை செய்யப்பட்டு வருகிறது. தேவனே, இந்த பட்டயத்தை நான் உருவட்டும்.அது பளிங்கு போல் பிரகாசிக்கட்டும். நான் அணிவகுத்து முன் செல்வேனாக. என் சித்தம் பின்னால் தள்ளப்பட்டு, இருபுறமும் கருக்குள்ள பட்டயம் வழியுண்டாக்கி முன் செல்வதாக. இப்பொழுது நாம் எழுந்து நின்று நமது பிரதிஷ்டையைப் புதுப்பித்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் உங்களை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள். நாம் ஒவ்வொருவரும் தேவனிடத்தில் நமது கரங்களை உயர்த்துவோம். 62எங்கள் பரலோகப் பிதாவே, எங்களுக்குத் தெரிந்த வரைக்கும் இன்றிரவு எங்களை உமக்கென்று பிரதிஷ்டை செய்து கொள்கிறோம். நாங்கள் சகலத்துக்கும் சுதந்தரவாளிகள் என்பதை அறிந்திருக்கிறோம். கர்த்தராகிய இயேசுவே, அதை நீர் வாக்களித்திருக்கிறீர், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்.கர்த்தாவே, எங்கள் விசுவாசத்தை உமது வாக்குத்தத்தத்தின் மேல் நாங்கள் வைக்காமல் போனால்,அதை நாங்கள் ஒருக்காலும் அடையமுடியாது. நீர் வேதத்தில், “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினை தீர்ப்பு அடையாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசிக்கிறான்' என்று கூறியிருக்கிறீர்.''என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்பது வாக்குத்தத்தமாயுள்ளது. அப்படித்தான் நீர் கூறியிருக்கிறீர். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். கர்த்தராகிய தேவனே, பரிசுத்த ஆவியே, எங்கள் மேல் அசைவாடும். ஓ, தேவனே, அசைவாடும்! ஓ,கர்த்தாவே, எங்களுக்குள் அசைவாடும்! ஜீவனுள்ள தேவனின் ஆவியே எங்களை ஏற்றுக்கொள்ளும். கிறிஸ்துவின் நாமத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளும். என்னை சுத்திகரியும். என்னை வனையும், ஓ, தேவனே, என்னை தேவனுடைய குமாரனுடைய சாயலில் உருவாக்கும். கர்த்தாவே, என்னை ஏற்றுக்கொள்ளும். நான் உம்முடையவன். இந்த சபையை உமக்களிக்கிறேன். கர்த்தாவே, இங்குள்ள ஒவ்வொரு ஆத்துமாவையும் என்னோடு கூட உமக்களிக்கிறேன். எங்களை வனையும், உருவாக்கும். எங்கள் பாவமான பொல்லாத வழிகளை விட்டு, உமது வாக்குத்தத்தத்தின் மேல் எங்களுக்குள்ள விசுவாசத்தை நாங்கள் வைப்போமானால்,எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி அளிப்பீர் என்று அறிந்து கொள்ள அருள் புரியும். அதை நீர் வாக்களித்திருக்கிறீர். 63கர்த்தாவே, சாத்தான் எங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. அவனால் இயன்றதை அவன் செய்யக்கூடும். ஆனால் அவனால் எங்களைத் தொட முடியாது. அவனை ஒரு முறை நீர் யோபின் மேல் அவிழ்த்து விட்டபோது நீர், ''அவனுடைய பிராணனை எடுத்துக் கொள்ளாதே“ என்றீர். அவன் மற்றெல்லாவற்றையும் செய்தான். ஆனால் பிராணனை மாத்திரம் அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் உமது வாக்குத்தத்தம் இன்னமும் யோபுக்கு இருந்தது. தேவனே, நீர் இன்றைக்கும் அதே தேவனாக இருக்கிறீர். உமக்கு சொந்தமானவர்களை நீர் பாதுகாக்கிறீர்.அது உண்மையென்று நாங்கள் அறிவோம். நாங்கள் மறுபடியும் எங்களை பிரதிஷ்டை செய்கிறோம். கர்த்தாவே, எங்கள் விசுவாசத்தை நாங்கள் அறிக்கையிடும் இந்நேரத்தில் பாவமுள்ள எங்கள் ஆத்துமாக்களை கழுவியருளும். கிறிஸ்து இயேசுவே . எங்களை ஏற்றுக்கொள்ளும். கர்த்தருடைய இராப்போஜனத்தை நாங்கள் உட்கொள்ளும் போது, எங்களுடன் எங்கள் இருதயத்தில் பேசும். நாங்கள் எங்கு தவறியிருக்கிறோம் என்பதை எங்களுக்கு காண்பியும். அதற்காக நாங்கள் தாழ்மையோடு மனஸ்தாபப்படுகி றோம். கர்த்தாவே, என் பாவங்கள் அனைத்தையும் நான் தாழ்மையுடன் பலிபீடத்தின் மேல் வைக்கிறேன். கர்த்தாவே, என்னை தாழ்மையுடன் உமது வார்த்தையின் மேல் வைத்து இரக்கத்துக்காக கெஞ்சுகிறேன். கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன். உமது சித்தப்படி எனக்கு செய்யும். கர்த்தாவே, அதுவே இந்த சபையின் கூக்குரலாயுள்ளது. “உமது சித்தப்படி எங்களுக்கு செய்யும்''. கர்த்தாவே, எனக்காக மாத்திரமே நான் பேச முடியும். ஆனால் இவர்களும் அவர்களுடைய இருதயங்களில் அதையே விசுவாசிக்கின்றனர் என்று நான் நம்புகிறேன். உமது சித்தத்திற்கேற்ப எங்களுக்கு செய்யும். நாங்கள் விசுவாசிக்கிறோம். நாங்கள் கிறிஸ்து இயேசுவில் நிலைத்திருக்கும் வரைக்கும் சுதந்தரவாளி களாக இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். நாங்கள் சிங்காசனத்துக்கு முன்பாக அவரோடு கூட சுதந்தரவாளிகளாயிருக்கிறோம். 64எங்களோடு கூட இருப்பீராக. எங்கள் மத்தியிலுள்ள வியாதியை சுகப்படுத்தும். இன்றிரவு வியாதிப்பட்ட சரீரம் இருக்குமானால், அதை தொட்டு சுகப்படுத்துவீராக. கர்த்தாவே, இதை அருளும். வியாதியுள்ள ஆத்துமா இருக்குமானால், அது இப்பொழுது சுகமடையட்டும். அந்த ஊனமுள்ள ஆத்துமா நேராகட்டும். தளர்ந்த முழங்கால்களும் பலவீனமான கரங்களும் மகிமையாக எழுந்து தேவனை ஆர்ப்பரிக்கட்டும். வனாந்தரத்தில் எங்கள் தேவனுக்காக ஒரு பெரும் பாதை இருக்கட்டும். கர்த்தாவே, நீர் சீக்கிரமாய் வருகிறீர் என்று விசுவாசிக் கிறோம். கர்த்தாவே, உமது வார்த்தையை நாங்கள் அறைகூவி, வனாந்தரத்தில் எங்கள் கர்த்தருக்கென்று ஒரு பெரும் பாதையை அமைத்து,கோணலான வழிகளை நேராக்க அருள் புரிவீராக. நாங்கள் ஸ்தாபன வேர்களை அறுத்தெரிய கிருபைசெய்யும். கசப்பாகிய வேரை நாங்கள் அறுத்தெரிந்து, குரோதம், பொறாமை, சச்சரவு ஆகியவைகளை தகர்த்தெறிந்து, தேவனுடைய உண்மையான வார்த்தை களிப்பான நதியாக ஓடும்படி செய்வோமாக .பிதாவே, இதை அருளும். நாங்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு பெறுவதற்கு முன்பு எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 65சகோதரி ஸ்பென்சர் தங்கள் சரீரத்துக்காக ஜெபத்தை கோருகிறார்கள். பரலோகப் பிதாவே, இந்த எளியவ யோதிப பரிசுத்தவாட்டி இங்கு உட்கார்ந்து கொண்டிருக் கிற இவர்கள் ஊமையாயிருக்கிறார்கள். ''ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவள் ஓய்வு நாளில் விடுவிக்கப்படக் கூடாதா?'' .அவர்களுடைய நண்பரில் அநேகர்; அவர்கள் உபசரித்த அவர்களுடைய பழைய காலத்து போதக நண்பரில் அநேகர் பரலோகத்துக்கு கொண்டு செல்லும் பெரும் பாதையில் கடந்து சென்றுவிட்டனர். கர்த்தாவே, இவர்கள் மாத்திரம் சாட்சியாக தனிமையில் விடப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இப்பொழுது வேறு யாரும் இல்லை. அவர்களுடைய பிள்ளைகளும், இங்கும் அங்கும் ஒரு நண்பரும், அவ்வப்போது ஒரு உறவினர் மாத்திரமே. ஆனால் அவர்கள், ஒரு பெரிய காடு புயல் காற்றினால் வீழ்த்தப்பட்டு, ஒரு மரம் மாத்திரம் தனிமையில் நிற்பது போல் இருக்கிறார்கள். தேவனே, அவர்களுடைய வேர் ஆழமாக பதிந்துள்ளது. தேவனே, உமது மிகுந்த இரக்கத்தினால் அவர்களைக் கண்ணோக்கி பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் கல்வாரி மலையில் நின்று கொண்டு, கிறிஸ்துவின் விசுவாசத்தில் ஆழமாக வேர் கொண்டிருக்கிறார்கள். இந்த அருமையான வயோதிப பரிசுத்த வாட்டியின் மேல் என் கைகளை வைத்து, அவர்களுடைய நாவின் கீழுள்ள கட்டை கடிந்துகொள்கிறேன். அது அவர்களை விட்டு சென்று அவர்கள் சுகமடைவார்களாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரி ஸ்பென்சரே, நன்றி. அது நிச்சயம் நடக்கும். அதைக் குறித்து சிறிதளவும் சந்தேகப்பட வேண்டாம். சரி. என் விசுவாசம் உம்மையே கண்ணோக்குகிறது கல்வாரியின்ஆட்டுக்குட்டியே தெய்வீக இரட்சகரே நான் ஜெபிக்கும்போது எனக்குச் செவிகொடும் என் பாவங்கள் அனைத்தும் போக்கிடும் நான் உம்மிடமிருந்து என்றென்றைக்கும் வழி விலகாதிருப்பேனாக கவனியுங்கள்,என்னுடன் சேர்ந்து பாடுங்கள். வாழ்க்கையின் இருண்ட பாதையில் நான் நடந்து என்னை துயரம் சூழ்ந்து கொள்ளும்போது என் வழிகாட்டியாயிரும் இருள் பகலாக மாறக் கட்டளையிடும் துயரத்தின் கண்ணீரைத் துடையும் ஓ, இந்நாள் முதற்கொண்டு நான் முழுவதும்உம்முடையவனாயிருப்பேனாக இப்பொழுது உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து. தேவன் மாத்திரமே அதை அறிவார். உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து, ''கர்த்தாவே, இந்நாள் முதல் நான் முழுவதும் உம்முடையவ னாயிருப்பேனாக'' என்பதை உண்மையாகவே கூறுகிறீர்களா? அந்த கடைசி பாகத்தை நாம் மறுபடியும் பாடுவோம். நான் உம்மிடமிருந்து என்றென்றைக்கும் வழி விலகாதிருப்பேனாக 66இப்பொழுது எல்லோரும் சேர்ந்து. மந்தையின் மகத்தான மேய்ப்பரே, நாங்கள் இவ்விதம் ஜெபிக்க வேண்டுமென்று எங்களுக்கு நீர் போதித்திருக்கிறீர். (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் ஒன்று சேர்ந்து ஜெபிக்கின்றனர் - ஆசி. பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும், எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல், எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், இராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். நீங்கள் உட்காரலாம். 67நான் சகோதரி ஷெப்பர்ட்டின் பிள்ளைக்காக இப்பொழுது ஜெபத்தை கோருகிறேன். அந்த பிள்ளைக்கு ஜெபம் செய்ய வேண்டுமென்று சற்று முன்பு என்னைத் தொலைபேசியில் கேட்டுக்கொண்டது இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. அந்த பிள்ளைக்காக நான் ஜெபித்தேன். அதை சந்திக்க எனக்கு குறிக்கப்பட்டி ருந்தது. ஆனால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. அந்த சிறு பெண்ணுக்கு ஜூரம் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு அது தெரியும். சில சமயங்களில் தசைகள் மேலே இழுத்துக் கொண்டு, நீங்கள் அதை உருவி விட வேண்டும். திருமதி ஹேலிக்கும், மற்றும் பலருக்கும் அப்படித்தான் ஆயிற்று, அது எங்கு பார்த்தாலும் உள்ள விஷ ஜுரம். அவள் .... நான் அவளுக்காக ஜெபித்தேன். ஒன்பது மணிக்கு அல்லது ஆராதனை முடியும் நேரத்தில் குழந்தையின் உடல் நிலை தேறவில்லையென்றால், எனக்கு அதை அறிவித்தால், நாங்கள் வீட்டுக்குச் செல்வோம் என்றும், அது தேறியிருந்தால் சரியாகி விடுமென்றும் அவர்களிடம் சொல்லியிருந்தேன். இப்பொழுது நாம் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் முன்பு, அந்த பிள்ளைக்காக தாழ்மையோடு ஜெபிப்போம். 68கர்த்தராகிய இயேசுவே, அந்த குழந்தைக்கு என்ன வயதென்று எனக்குத் தெரியாது. ஆனால் கர்த்தாவே, அது இங்குள்ள அன்பார்ந்த சீஷர்கள் ஒருவரின் - எங்கள் விசுவாசி ஒருவரின் - குழந்தை. அது சகோதரி ஷெப்பர்டுக்கும் சகோதரன் ஷெப்பர்டுக்கும் நீர் அளித்துள்ள ஒரு இரத்தினம். அதன் மேல் நீர் கவனமாயிருந்து, அதை ஆசீர்வதித்து பாதுகாத்து அதற்கு சுகத்தையளிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதை நாங்கள் உரிமை கோருகிறோம். இந்த செய்திக்குப் பின்பு நாங்கள் அதை உரிமை கோருகிறோம். தேவனுடைய மகிமைக்கென்றும் அவருடைய வார்த்தையின்படியும் நாங்கள் உரிமை கோருகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த வியாதி பிள்ளையை விட்டுப் போவதாக. அது தேவனுடைய மகிமைக்கென்று தேறி சுகம் பெறுவதாக. அது உரைக்கப்பட்டுவிட்டது, அது நிச்சயம் நிறைவேறும், ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?' 69நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவர் நிச்சயம் உங்களை வெளியே கொண்டு வருவார். உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டு விடுங்கள். அங்கே விட்டு விடுங்கள், ஓ, அங்கே விட்டு விடுங்கள் உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டு விடுங்கள். நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவர் நிச்சயம் உங்களை வெளியே கொண்டு வருவார். உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டு விடுங்கள் (அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டும்) நீங்கள் உடல்வலியினால் அவதியுற்று உங்கள் ஆரோக்கியத்தை திரும்பப்பெற முடியாமல் போனால் பரலோகத்தின் தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர் என்பதை நினைவு கூருங்கள் உங்களுக்குள்ள வலியை தேவனறிவார், அவர் இரட்சித்து சுகமாக்க முடியும் உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டு விடுங்கள். நாம் கடைசி சரணத்தை பாடும் போது ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். அங்கே விட்டுவிடுங்கள் (ஐக்கியம், உங்களுக்குத் தெரியும்,ஐக்கியப்படுதல்) அங்கே விட்டுவிடுங்கள் (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்) உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டு விடுங்கள் நீங்கள் சந்தேப்படாமல் விசுவாசித்தால்,அவர் நிச்சயம் உங்களை வெளியே கொண்டு வருவார் உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று அங்கே விட்டு விடுங்கள். 70ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? நாம் அறிக்கை யுடனும் விசுவாசத்துடனும், நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டு, நமது பாவங்கள் அனைத்தும் மறதிக் கடலில் போடப்பட்டுவிட்டது என்று விசுவாசிப்போம். ஒருவன் தன் பாவங்களை அறிக்கையிட்டால், அவைகளைப்போக்க தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார். பாருங்கள்? அவை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கடலில் போடப்பட்டு, இனி ஒருபோதும் நினைவு கூரப்படுவதில்லை. வெண்மையாக்கும் திரவத்தைக் குறித்து பெண்களாகிய உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? நீங்கள் அனைவருமே, ஒரு தொட்டி நிறைய வெண்மையாக்கும் திரவத்தை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு கறுப்பு மையை ஊற்றுங்கள். அது தான் உங்கள் பாவங்கள், நீங்கள் தொட்டியின் அருகே நின்று கொண்டு, ஒரு சொட்டு கறுப்பு மையை குப்பியிலிருந்து அதில் ஊற்றிப் பாருங்கள். அந்த மையை காணமுடிகிறதா? அதற்கு என்ன நேர்ந்தது? அந்த கறுப்புமை என்ன ஆனது? அது வெண்மையாக்கும் திரவத்தில் ஊற்றப்பட்டபோது, அந்த திரவம் மிகவும் சக்தி வாய்ந்த காரணத்தால், அதன் நிறத்தை அது எடுத்துப் போட்டுவிட்டது. அதை இனிமேல் காணவே முடியாது. அது என்ன? அது போய்விட்டது. அது நித்தியமாக காணாமற்போய் விட்டது. அது என்ன? அந்த மையே வெண்மையாக்கும் திரவமாகிவிட்டது. அறிக்கை செய்யப்பட்ட ஒவ்வொரு பாவத்துக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவ்விதமே உள்ளது. அது என்ன? அது மறக்கப்பட்டுவிட்டது. அது முடிந்துவிட்டது, அது நீக்கப்பட்டுவிட்டது, அது தள்ளப்பட்டுவிட்டது, அது ரத்து செய்யப்பட்டுவிட்டது. அது இனி ஒருபோதும் உங்களுக்கு விரோதமாக நினைவு கூரப்படுதில்லை. 71(சபையிலுள்ள ஒரு சகோதரி பேசுகிறாள் - ஆசி ) யாரோ எங்கிருந்தோ என் பெயரைக் கூப்பிடுகிறார்கள்.(அந்த சகோதரி அப்பொழுது தான் சுகமடைந்ததாக சாட்சி கூறுகிறாள்). நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். ஓ, தேவனே, உமது நன்மைக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம். ஆம், பின்னால் உள்ள அந்த எளிய ஆத்துமா தொடப்பட்டாள். கர்த்தர் அவளைத் தொட்டார். சரி. நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராய் அவர் இருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் உறுதியான, நிச்சயமான நங்கூரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... பாருங்கள்? உங்கள் விசுவாசத்தை அதன் மேல் வைத்து, அசையாமல் அதில் உறுதியாய் நில்லுங்கள்.உங்கள் விசுவாசத்தை அங்கு வைத்து, அதை பின்பு கையில் எடுத்துக் கொண்டு, “நான் மறுபடியும் முயற்சி செய்வேன்” என்று கூற முடியாது. அதை அங்கு வைத்து விட்டு, அதில் உறுதியாய் தரித்திருங்கள். ஆம், ஐயா, ஆபேல் செய்தது போல, உங்கள் சுய எண்ணங்களுக்கு நீங்கள் மரிக்கவேண்டும். ''தேவனே, இது உம்முடைய வார்த்தை. இது என் சொந்த கருத்தல்ல. இது உம்முடைய வார்த்தை'' என்று மட்டும் கூறுங்கள். ஆபேல் கன்மலையின் மேல் மரித்தான். அவர் அந்த சகோதரியை தொட்டது போல உங்களையும் தொடுவார். அது அவ்வளவு சுலபமானது. நாம் முயல்கிறோம்... நாம் அல்ல, அதை மிகவும் கடின மாக்க சாத்தான் முயல்கிறான். அவன் “ஓ உங்களுக்குத் தெரியுமா, அது கடந்துபோன காலத்துக்குரியது என்கிறான். அவர்கள் அவிசுவாசிகள். ஆனால் விசுவாசிக்கிற உங்களுக்கோ அவர் விலையேறப் பெற்றவராக இருக்கிறார். அவர் தேவைப்படும் போது மாத்திரம் கர்த்தர் அல்ல, அவர் விலையேறப்பெற்ற கல், அவர் ஜீவனுள்ள கல்லிடம் வரும் விலையேறப்பெற்ற கல்லாக, மூலைக்கல்லாக இருக்கிறார். ஓ, என்னே ! ஓ, இந்த கல்லைத் தொடுகிறவன் சுகமடைவான் அவ்வளவுதான். ஆமென். 72இப்பொழுது நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் அல்லவா? நாம் மகிழ்ச்சிகொண்டவர்க ளாய் இருக்கிறோம். கர்த்தர் தேவனாயிருப்பதால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆமென். அவர் இளகிய மனம் கொண்ட பிதாவாயிருப்பதால் நான் மகிழ்வுறுகின்றேன். அவர் இரக்கம் நிறைந்தவர், தமது வார்த்தையை கனம் பண்ணுகிறவர், தமது உடன்படிக்கையை ஒரு போதும் மறவாமல் அதைக் காக்கிறவர். அவர் தமது உடன்படிக்கையை செய்தவர். அவரே சகல சத்தியத்துக் கும் ஊற்று. பாருங்கள்? எல்லா காலத்திலும் கலப்பட மற்ற சத்தியத்தைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிழையற்றது. இது அவருடைய வார்த்தை, ஓ, தேவனே, அதன்மேல் நான் கொண்டுள்ள விசுவாசம் உறுதியாயிருப்பதாக. ஆமென். அப்பொழுது வார்த்தை பிழையற்றது போல் அதுவும் பிழையற்றதாயிருக்கும். அப்படிப்பட்ட விசுவாசம் கொள்ளும்போது; வார்த்தை எதை வேண்டுமானாலும் செய்யும்.அது கூறியுள்ளதை அது நிறைவேற்றும். ஆமென். கர்த்தாவே, என்ன சுத்திகரியும், என்னை சோதித்துப்பாரும், என்னை சுத்திகரியும், என்னை சுகமாக்கும், என்னை பாதுகாக்கும், என்னை ஆசீர்வதியும், உமது இரக்கத்தை எனக்கு அருளும் என்பதே நான் தேவனிடம் ஏறெடுக்கும் ஜெபம். ஆமென். 73இப்பொழுது நான் 1 கொரிந்தியர் 11ம் அதிகாரம் 23ம் வசனம் தொடங்கி சில வசனங்களை படிக்கப்போகின்றேன். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன். என்னவெனில் கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து. ஸ்தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது : என்னை நினைவுக்கூறும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து : இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது: நீங்கள் இதைப்பானம் பண்ணும்போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்தஅப்பத்தைப் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனம் பானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனமும் வியாதியுள்ளவர் களுமாயிருக்கிறார்கள், அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாந்தீர்க்கப்டோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு,கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம் பண்ணக் கூடிவரும்போது,ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் 74இதை நான் கூற விரும்புகிறேன். இயேசு மரிப்பதற்காக செல்வதற்கு முன்பு, அவர் அங்கு செல்கின்றார் என்று அறிந்தவராய் இந்த கட்டளையை கொடுத்தார். அவர் எதைக்குறித்து பேசுகிறார் என்று சீஷர்கள் வியந்து இதை அப்பொழுது எழுதிவைத்தனர். அவர், ''இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை யாயிருக்கிறது. நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் நான் வருமளவும் என் மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்'', என்றார். ஓ, அந்த விலையேறப் பெற்ற வார்த்தைகள். சீஷர்கள், அவருடைய மரணத்தைத் தெரிவித்தல்'' என்று அவர் கூறுவதன் அர்த்தம் என்ன? நாம் எப்படி அதை செய்வது?'' என்று வியந்தனர் என்பதில் ஐயமில்லை. அது அவர்களுக்குப் புதிராக இருந்தது, ஆனால் அவருக்கு அப்படி இருக்கவில்லை. அவர் தேவன். அவர் என்ன செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தார். “தெரிவிக்கிறீர்கள்...'' எனவே அவர், ''நீங்கள் போஜனம் பண்ணக்கூடிவரும் போது...'' என்றார். இப்பொழுது, ''அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன்'' இங்கு வந்து தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொண்டு கர்த்தருடைய சரீரத்தை உட்கொண்டு பிறகு சென்று உலகத்தோடு வாழ்ந்து, கிறிஸ்துவையும் அவருடைய வல்லமையையும் மறுதலிப்பானானால்; நீங்கள் தேவனுக்கு பெரிய அவமகிமையை விளைவிக்கின்றீர்கள். நீங்கள் கிறிஸ்துவை அவமதிக்கின்றீர்கள். எனவே அதில் பங்கு கொள்ளாதீர்கள். ஆனால் உங்களுக்குள்ள எல்லாவற்றைக் கொண்டும் நீங்கள் சரியாக வாழ முயன்று, உங்களைக் கிறிஸ்தவனாகவும், நீங்கள் கிறிஸ்துவை நேசிக்கின்றீர்கள் என்றும் காண்பித்தால், அதில் பங்கு கொள்வது உங்கள் கடமையாகும். 75இப்பொழுது... அது பரி. யோவான் 6ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். இயேசு “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்றார். அது மகிமையான வாக்குத்தத்தம் அல்லவா? 'நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்பது. நீங்கள் எதற்காக இங்கிருக்கிறீர்கள்? என்று எப்பொழு தாவது நினைத்துப் பார்த்ததுண்டா? பிள்ளைகளே, நீங்கள் எதற்காக பள்ளிக்குச் செல்கிறீர்கள்? தகப்பனே, நீ எதற்காக வேலை செய்கிறாய்? தாயே, நீ காலையில் எழுந்து, பிள்ளைகளின் முகத்தைக் கழுவி, அவர்களை பள்ளிக்கு அனுப்பி, அவர்களுடைய படுக்கையை விரித்து, சமையல் செய்து, இவை எல்லாவற்றையும் செய்து, இரவில் களைப்பாகி, மறுபடியும் அடுத்த நாள் இதையே திரும்பவும் செய்யும்படி உன்னைத் தூண்டுவது எது? அதை ஏன் செய்கிறாய்? தகப்பனே, நீ ஏன் கடினமாக உழைத்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும்? இரவில் களைப்புடன் வரும் போது, உன் குழந்தைகளில் ஒன்று வியாதிப்பட்டிருக்கக் கண்டால் அது சுகமாகும் வரைக்கும் அதை தோளின் மேல் போட்டு இங்கும் அங்கும் நடந்து, அதற்காக நீ ஏன் அழுது ஜெபிக்க வேண்டும்? பிறகு அதையே நீ மறுபடியும் செய்கிறாய். ஞாயிறு தோறும் பிள்ளைகளின் முகங்களைக் கழுவி, அவர்களை சபைக்குக் கொண்டு வருகிறாய். நல்லது , இதெல்லாம் என்ன? அவன் ஏன் இங்கிருக்கிறான்? இவ்வளவு மாத்திரம் தானா? அப்படியானால் அது மிகவும் பரிதாபமாயிருக்கும் - முக்கியமாக நீ எப்படியும் இவ்வுலகை விட்டுப் போக வேண்டும்மென்று அறிந்திருக்கும் போது. இதெல்லாம் என்ன ? 76ஓ! சகோதரனே, இது சோதித்தறிய வேண்டிய நேரம், இது தருணம் அளிக்கப்பட்டுள்ள நேரம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே. இதன் இடத்தை எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்றை என்னிடம் கூறுங்கள் பார்க்கலாம். இதைக்காட்டிலும் மேலான ஒன்றை எனக்குக் காண்பியுங்கள். இவ்வுலகில் நீங்கள் அண்டசராசரங்களை ஆளும் ராஜாவாக இருக்கக் கூடும். நீங்கள் க்ருஷேவ் அல்லது கென்னடியாக அல்லது வேறு வகையில் முக்கியமானவராக இருக்கக்கூடும். நீங்கள் எப்படியானாலும் மரிக்க வேண்டும். உண்மை ! மரணம் எந்த நேரத்தில் எந்த நிமிடத்தில் நேரிடும் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். ஆனால் இங்கோ, மரணம் தாக்கும் போது, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருப்பதால் மரிக்கமாட்டீர்கள் என்னும் உத்தரவாதத்தை எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனிடமிருந்து - வானத்தையும் பூமியையும் உடையவரான தேவனிடமிருந்து - பெற்றிருக்கிறீர்கள். ஓ தேவனே ,என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். ஓ தேவனே, என் ஆத்துமாவை நிரப்பும், என்னை சுத்திகரியும், என்னை நிரப்பும், எனக்கு கட்டளையிட்டு வெளியே அனுப்பும். நான் மரிக்காமலிருக்கட்டும். இந்த வரலாற்றை கூற நான் உயிர் வாழட்டும். நான் உலகின் ஒவ்வொரு முக்கு மூலையிலும் சென்று வார்த்தையைப் பிரசங்கித்து, விதையை விதைக்கட்டும். ஆம், ஐயா. இந்தக் கடைசி நாளில் கலப்படமற்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் விசுவாசிகளாயுள்ளவரின் அறுவடை நிகழ்வதாக. 77இன்றிரவு நீங்கள் கிறிஸ்து இயேசுவில் கொண்டுள்ள விசுவாசத்தினால் உங்கள் பாவங்கள் இரத்தத்தின் கீழ் உள்ளதா? இப்பொழுது நாம் இராப்போஜனத்தில் பங்கு கொள்வோம். நீங்கள் புசித்து ஒருவருக்கொருவர் ஐக்கியங்கொள்ளும் இந்நேரத்தில், தேவனிடம் ஐக்கியங் கொள்ளுங்கள். ஐக்கியம் என்பது இந்த அப்பமும் திராட்சரசமும் அல்ல. அது தேவனுடன் உரையாடுவதே. நாம் அவருடைய மரணத்தை, நொறுக்கப்பட்ட சரீரத்தை அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளை விசுவாசிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இதை உட்கொள்கிறோம். நாம் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை விசுவாசிக்கிறோம். அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார் என்றும், நாம் மரிப்பதில்லை என்றும் நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறோம் என்றும் விசுவாசிக்கிறோம். என்றாகிலும் ஒரு நாள் நாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து செல்ல நேரிட்டாலும், நாம் உயிர்த்தெழுதலின் போது உயிரோடெழுந்து ஒருவரையொருவர் சந்தித்து, பிற கிறிஸ்து இயேசுவில் ஒரு சரீரமாக இணைக்கப்படுவோம். ஆமென். இந்த அடிப்படையிலும், என் பாவத்தை அறிக்கையிட்டு, தேவனுடைய குமாரன் மேல் நான் கொண்டுள்ள விசுவாசத்தின் அடிப்படை யிலும், நாம் செய்ய வேண்டுமென்று நமக்கு தேவன் விட்டு சென்றுள்ள இந்த பொருட்களுக்கு முன்னால் என்னையும் சபையையும், அவர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்க கொண்டு வருகிறேன். 78“இது உங்களுக்காக பிட்கப்படுகிற என்னுடைய சரீரமா யிருக்கிறது. என்னை நினைவு கூரும்படி இதை புசியுங்கள்'' என்று இயேசு கூறினார். எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய வார்த்தையை நாங்கள் கேட்டு, நாங்கள் அபாத்திரர் என்றும், தேவனுடைய குமாரனின் தகுதியை நம்பியே பந்தியில் சேருகிறோம் என்றும் அறிக்கையிடுகிறோம். நாங்கள் அபாத்திரமான சிருஷ்டிகள். கர்த்தாவே, நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னியும். இப்பொழுது விசுவாசத்தினால் நாங்கள் கர்த்தருடைய பந்திக்கு வருகிறோம். இந்த அப்பம் கர்த்தருடைய சரீரத்தின் அடையாளமாக சமர்ப்பிக்கப்படுகிறது. பிதாவே, இதன் நோக்கத்தை இது நிறைவேற்ற அதை பரிசுத்தப்படுத்தும். இதில் பங்கு பெறும் ஒவ்வொரு நபரும் தன் ஆத்துமாவில் நித்திய ஜீவனைப் பெறுவாராக. இதை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் சரீரத்தில் சுகம் பெற்று, அவர்களுக்கு நீர் குறித்துள்ள காலம் வரைக்கும் வாழ்வார்களாக. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உம்மை சேவித்து, கடைசி நாளில் உயிர்த்தெழுதலில் உயிரோடெழுந்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்க்கப்பட்டவர்களுடன் ஒன்று சேர்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 79''போஜனம்பண்ணின பின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து இந்த பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை யாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்“ என்று வேதம் கூறுகிறது. பரலோகப் பிதாவே, இந்த திராட்சை பழரசத்தை இன்றிரவு உமக்கு முன்பாக பிடித்திருக்கிறோம். பரலோகப் பிதாவே, கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தத்துக்கு அடையாளமாயுள்ள இந்த திராட்சைரசத்தை பரிசுத்தப்படுத்த வேண்டுமாய் ஜெபிக்கிறோம். இயேசு கிறிஸ்து முடித்த கிரியையில் நாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம், இந்த இரத்தத்தினால் எங்களுக்கு பாவமன்னிப்பு உள்ளது. கர்த்தாவே, எங்கள் அவிசுவாசம் அனைத்தும் மன்னித்து, எங்களுக்கு விசுவாசத்தையும், புரிந்துகொள்ளுதலையும் அளித்து, எங்களை உமது ஊழியக்காரராக்கிக் கொண்டு, எங்கள் வாழ்நாள் முழுவதும் உம்மைச் சேவிக்க அருள் புரியும். பிதாவே, இந்த மேசையைச் சுற்றிலும் நாங்கள் கூடியுள்ள இந்நேரத்தில் எங்களோடு கூட இருந்து, நாங்கள் உம்முடன் கொண்டுள்ள இந்த அருமையான ஐக்கியத்தில் எங்களை ஆசீர்வதிப்பீராக. உங்கள் இருதயங்களில் நீர் பேசி, நாங்கள் செய்ய வேண்டிய வேலையை எங்களுக்கு காண்பியும். கர்த்தாவே, இதை அருளும். இந்த திராட்சைரசத்தை அதன் நோக்கத்திற்கென்று பரிசுத்தப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென்.